இரத்மலானையில் இடம்பெற்ற மற்றுமொரு துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் காயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச் சம்பவத்தில் மேல் மாகண சபை உறுப்பினர் அமல் சில்வா மீதே துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இரத்மலானை, ஹொலுமாதுவ சந்தியில் காரில் வந்த ஆயுதகுழுவினரால் குறித்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.