சுதந்­திரக் கிண்ண முத்­த­ரப்பு இரு­ப­துக்கு 20 கிண்ணத் தொடரின் இரண்­டா­வது போட்­டியில் இந்­தியா மற்றும் பங்­க­ளாதேஷ் அணிகள் இன்று பலப்­ப­ரீட்சை நடத்­து­கின்­றன.

இப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி முதலில் பங்களாதேஷ் அணியை துடுப்பெடுத்தாடுமாறு பணித்தது.

அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 139 ஓட்டங்களைப் பெற்றது.

இந்நிலையில் இந்திய அணி 140 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் துடுப்பெடுதாடவுள்ளது.

பொறுத்திருந்து பார்ப்போம் வெற்றி யார் பக்கமென...