கொழும்பு, கொட்டாஞ்சேனையில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச் சம்பவத்தில் காயமடைந்த மூவரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச் சம்பவம் சற்றுமுன்னர் கொட்டாஞ்சேனை சுமித்ராராம வீதியில் இடம்பெற்றுள்ளது.

காயமடைந்த மூவரில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.