ஒரு சிலருக்கு தொடர்ந்து துதி சக்கர மோட்டார் வண்டியை ஓட்டுவதால் தோள்பட்டையில் ஒருவித வலி உண்டாகும். அதனை பெரும்பாலானவர்கள் வெந்நீர் ஒத்தடம் அல்லது வலி நிவாரணி களிம்புகளைத் தடவிக் கொண்டு நிவாரணம் தேடுவர். இந்நிலையில் இந்த தோள்பட்டை வலிக்குரிய சிகிச்சையைப் பற்றி விளக்கம் அளிக்கிறார் டொக்டர் சுதன் கிறிஸ்துதாஸ்.

ஒருவருக்கு அவரின் சர்க்கரை நோயின் அளவைப் பொறுத்து தோள் பட்டையைச் சுற்றியிருக்கும் தசைகள் இறுக்கமடையும். இதனை  தொடக்க நிலையிலேயே கவனித்து பிஸியோதெரபி எனப்படும் இயன்முறை மருத்துவம் மற்றும் மருத்துவர்களின் வழிகாட்டலுடன் கூடிய சிகிச்சைப் பெற்றுக்கொண்டால் குணமடையலாம். 

இதனை கவனியாது விட்டால் சில மாதங்களுக்கு பிறகு தோள்பட்டையை சிறிய அளவிற்கு கூட நகர்த்த முடியாத அளவிற்கு ப்ரோஷன் ஷோல்டர் என்ற எல்லைக்கு கொண்டு சென்றுவிடும். இது போன்ற தருணங்களில் கூட உடனடியாக சத்திர சிகிச்சையை மேற்கொள்ளாமல், நோயாளிக்கு சற்றே மயக்கமளித்து, அப்பகுதியை சுற்றியுள்ள தசைப்பகுதியை தளரச் செய்யும் பயிற்சியை மேற்கொள்வார்கள். அதற்கு பிறகு அங்கு ஒரு மருந்தை ஊசி மூலம் செலுத்துவார்கள். இதனால் ப்ரோஷன் ஷோல்டர்  பிரச்சனையைக் குணப்படுத்தலாம்.

தொகுப்பு அனுஷா