கண்டி நிர்வாக மாவட்டத்தில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலைக்கு காரணமாக இருந்த பிரதான சூத்திரதாரி உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர கருத்து தெரிவித்துள்ளார்.

கண்டி நிர்வாக மாவட்டத்தில் இன்று மாலை 6 மணி முதல் 12 மணித்தியாலத்திற்கு ஊரடங்கு சட்டம் மீண்டும் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

Image result for ஊரடங்குச் சட்டம் virakesari

கண்டி நிர்வாக மாவட்டத்தில் ஏற்கனவே அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு சட்டத்தை இன்று முற்பகல் 10 மணிக்கு தளர்த்தப்பட்டது.

இந்நிலையில், மீண்டும் இன்று மாலை 6 மணியிலிருந்து நாளை காலை 6 மணி வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

பொதுமக்கள் உணவு உள்ளிட்ட அத்தியாவசியப்பொருட்களைப் பெற்றுக்கொள்வதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தும் வகையில், மக்களின் வேண்டுகோளைக் கருத்திற்கொண்டு இன்று காலை ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டிருந்தது.

இதேவேளை, கண்டி நிர்வாக மாவட்டத்திற்கு உட்பட்ட சகல அரச பாடசாலைகளுக்கும் கால வரையறையின்றி மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.