கடுவல பகுதியில் போதைப்பொருளுடன் இரு சந்தேக நபர்களை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

குறித்த நபர்களிடமிருந்து 30 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளை பொலிஸார் மீட்டுள்ளனர்.

இந்நிலையில், அவர்களிடமிருந்து 2 கிலோவுக்கும் அதிகமான ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.

கைதுசெய்யப்பட்ட இருவரிடமும் விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார், இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.