அமெரிக்கா - ஓஹிஹோ மாகாணத்தில்  பெற்ற மகளை 15 ஆண்டுகளாக பலாத்காரம் செய்து அவரை இரண்டு குழந்தைகளுக்கு தாயாக்கிய 53 வயதான தந்தையின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த காட்டு மிராண்டித்தனமான செயலுக்கு  தாயும் உடந்தையாக இருந்துள்ளார். 10 வயதான நிலையில் சிறுமியை பாலியல் தொல்லைக்குட்படத்தியுள்ளனர்.

இந்த 15 ஆண்டில் இரண்டு குழந்தைகளுக்கு தாயாகியுள்ளார். தற்போது 7 மற்றும் 2 வயதில் அவருக்கு குழந்தைகள் உள்ளனர்.

15 ஆண்டுகளாக இந்த கொடூரத்தை மகள் அனுபவித்த நிலையில் தற்போது தனது 25ஆவது வயதில் வீட்டிலிருந்து தப்பி வெளியில் சென்று பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைய தந்தையையும் தாயையும் பொலிஸார் கைது செய்து விசாரணைகளை நடாத்தி வருகின்றனர்.