புதி­தாக திரு­மணம் செய்து  ஐரோப்­பா­வுக்கு தேனி­லவைக் கழிக்கச் சென்ற  கணவரொருவர், தனது மனைவி  ஆடம்­ப­ர­மாக பணத்தைச் செல­வி­டு­வதில் நாட்டம் காட்டி தாம்­பத்­திய உற­வுக்கு மறுத்து வந்­ததால் சின­ம­டைந்து உட­ன­டி­யாக தாய்­நாடு திரும்பி அவரை விவா­க­ரத்துச் செய்த சம்­பவம்  டுபாயில் இடம்­பெற்­றுள்­ளது.

விமா­னத்தில் டுபாய்க்கு வந்­தி­றங்­கி­யதும்   சிறிது நேரத்­தையும் வீண­டிக்க விரும்­பாத அந்தக் கணவர்   நேர­டி­யாக   அங்­குள்ள மத நீதி­மன்­றத்­திற்குச் சென்று விவா­க­ரத்துக் கோரி வழக்குத் தாக்கல் செய்­துள்ளார். 

 டுபாய்  மத நீதி­மன்­றத்தில் குறிப்­பிட்ட கணவர்  தெரி­விக்­கையில்,    தன்னைத்  தொடு­வ­தற்கு கூட  அனு­ம­திக்­கா­தி­ருந்து வந்த தனது புது மனைவி  தனது பணத்தை ஆடம்­ப­ர­மாகச் செல­வ­ளிப்­பதில் பெரிதும் நாட்டம் காட்டி வந்­த­தாக குற்­றஞ்­சாட்­டி­யுள்ளார்.

இதனையடுத்து அந்தக் கணவனுக்கும் மனைவிக்குமிடையில்  புரிந்துணர்வை ஏற்படுத்தி  அவர்களை இணைத்து வைப்பதற்கு மேற்கொண்ட முயற்சி தோல்வியைத் தழுவியதையடுத்து அவர்கள் இருவருக்கும் விவாகரத்தை வழங்கி  மத நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.