பெண்கள் மற்றும் சமூ­கத்­தினர் பாது­காப்­பா­கவும், வினைத்­தி­ற­னுடன் வாழத்­த­குந்த பொரு­ளா­தார மற்றும் சமூக நிலை­களை உரு­வாக்க வேண்டும் என நல்­லாட்சி அர­சாங்கம் மீளவும் வலி­யு­றுத்­து­கின்­றது. பெண்கள் அர­சாங்­கத்தின் செயற்­பா­டு­க­ளுக்கு தமது மூலோ­பாய பங்­க­ளிப்­பினை வழங்க வேண்டும் என்று பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்­துள்ளார். 

Image result for பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க

சர்­வ­தேச மகளிர் தினத்தை முன்­னிட்டு அவர் வெளி­யிட்­டுள்ள வாழ்த்துச் செய்­தியில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­ வது,   

அனை­வ­ருக்கும் சம உரி­மை­யு­டைய சமூக உரு­வாக்­கத்தின் ஊடாக அனைத்து துறை­க­ளிலும் பெண்­க­ளுக்­கான அங்­கீ­காரம் வழங்கல் மற்றும் அவர்­க­ளுக்­கான அதி­கா­ரங்­களை பகிர்ந்­த­ளித்தல் என்­ப­வற்றை சாத்­தி­யப்­ப­டுத்த வேண்டும். அவ்­வா­றா­ன­தொரு சமூ­கத்தை கட்­டி­யெ­ழுப்­பு­வதன் மூலம் பெண்கள் சமூ­கத்தில் ஒரு வலு­வான பங்­க­ளிப்­பினை வழங்க முன்­வ­ருவர். 

பொது­வா­கவே பெண்கள் வீடு­களில் மாத்­தி­ர­மின்றி வேலைத்­த­ளங்­க­ளிலும், சமூ­கத்­திலும் பொறுப்­பு­ணர்­வு டன் செயற்­பட்டு தமது பங்­க­ளிப்­பினை வழங்கி வரு­கின்­றனர். அனைத்து துறை­க­ளிலும் சிறப்­பான அடை­வினை பெறுவ­தற்கு பெண்­களின் பங்­க­ளிப்பு இன்­றி­ய­மை­யா­த­தாகும். இன்­ற­ளவில் கல்வி, முகா­மைத்­துவம், கலை என எல்­லாத்­து­றை­க­ளிலும் பெண்கள் சிறப்­பாக செயற்­பட்டு வரு­கின்­றனர். அர­சியல் களத்­திலும் பெண்­களின் சிறப்­பான பங்­க­ளிப்­பினை பெற்­றுக்­கொள்ளும் வித­மா­கவே கடந்த உள்­ளூ­ராட்சி மன்ற தேர்­தலில் 25 சத­வீ­த­மான பெண் பிர­தி­நி­தித்­துவம் கட்­டா­ய­மாக்­கப்­பட்­டது. 

எனவே அர­சாங்­க­மா­னது பெண்கள் பாது­காப்­பா­கவும், வினைத்திறனுடனும் வாழ்வதற்கான சமூக நிலைகள் உருவாக் கப்பட வேண்டும் என்பதனை கருத்திற் கொள்வதோடு, அனைத்து பெண்களுக்கும் மகளிர்தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.