சர்­வ­தேச பெண்கள் தினத்­தை­யொ ட்டி முற்றுமுழு­தாக பெண் உத்­தி­யோ­கத்­தர்­களைக் கொண்ட எயார் இந்­தியா விமா­ன­மொன்று இன்று இலங்­கையை வந்­த­டை­யவும் பின்னர் இங்­கி­ருந்து புறப்­ப­டவும் உள்­ளது.

இலங்­கையில் மேற்­கொள்­ளப்­படும் இந்த பெண்கள் தொடர்­பான அரிய சமிக்ஞை நட­வ­டிக்­கை­யா­னது உல­க­ளா­விய ரீதியில் பாராட்டைப் பெற்­றுள்­ளமை குறிப்­பி­டத்­தக்கது.

இந்­தி­யாவின் சென்னை நக­ரி­லி­ருந்து கொழும்­பிற்கும் பின்னர் கொழும்­பி­லி­ருந்து புது­டில்­லிக்கும் இன்று வியா­ழக்­கி­ழமை பய­ணத்தை மேற்­கொள்ளும் மேற்­படி எயார் இந்­தியா விமா­னத்தை கப்டன் வி.ரூபா மற்றும் கப்டன் நிமிஷா கோல் ஆகியோர் செயற்­ப­டுத்­த­வுள்­ளனர்.

அதே­ச­மயம் இலங்­கை­யி­லுள்ள எயார் இந்­தியா அலு­வ­ல­க­மா­னது கொழும்பு பிரிஸ்டல் வீதி­யி­லுள்ள தனது அலு­வ­லக கட்­ட­டத்தில் வேறாக சர்­வ­தேச பெண்கள் தினத்தை அனுஷ்­டிக்­க­வுள்­ளது. அங்கு பயண மற்றும் உப­ச­ரணை துறை­யி­லுள்ள முன்னணி பெண்­களால் நடத்­தப்­படும் விசேட வைப­வ­மொன்று இடம்­பெ­ற­வுள்­                                               ளது. அதே­ச­மயம் இலங்­கை­யி­லுள்ள எயார் இந்­தியா அலு­வ­ல­கத்தில் முக்­கிய பத­வி­களை பெண்கள் வகிக்­கின்றமை குறிப்­பி­டத்­தக்­கது. 

அங்கு இலங்­கைக்­கான பிரா ந்­திய முகா­மை­யா­ள­ராக அலைஸ் ஜோபோலும் விமா­ன ­நி­லைய முகாமை­யா­ள­ராக மதுமிதா குப்­தாவும் இலங்கைக்கான எயார் இந்தி யாவின் பயணிகள் விமான சேவையான இன்டஸ்கி ஏவியேஷனின் பொது முகா மையாளராக தனுஜா லங்கா திலகவும் பணியாற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது.