வளர்ச்­சி­ய­டைந்த மேற்­கு­லக நாடு­க­ளுக்கு முன்­னரே பெண்­க­ளுக்கு வாக்­க­ளிக்கும் உரி­மையை பெற்­றுத்­தந்­தது எமது நாடாகும். உலகின் முத­லா­வது பெண் பிர­த­ம­ரையும் நிறை­வேற்று அதி­காரம் கொண்ட முதல் பெண் ஜனா­தி­ப­தி­யையும் இலங்கை உரு­வாக்­கி­ய­தற்கு வளர்ச்­சி­ய­டைந்த சமூகப் பின்­ன­ணியே கார­ண­மாகும் என்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்­துள்ளார்.

சர்­வ­தேச மகளிர் தினத்தை முன்­னிட்டு அவர் விடுத்­துள்ள வாழ்த்துச் செய்­தியில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,

பெண்­க­ளுக்கு சம கல்வி மற்றும் தொழில் உரிமை ஆகி­ய­வற்றைப் பெற்­றுக்­கொ­டுப்­பதில் வளர்ச்­சி­ய­டைந்து வரும் நாடு­களின் மத்­தியில் நாம் முன்­னிலை வகிக்க முடிந்­துள்­ளமை மகிழ்ச்­சிக்­கு­ரிய விட­ய­மாகும். நாட்டின் நிர்­வாகக் கட்­ட­மைப்பின் பல உயர் பத­வி­களை பெண்­க­ளுக்கு பெற்­றுக்­கொ­டுக்க இந்த கல்வி உரி­மையே கார­ண­மாகும். அவ்­வாறே, அர­சியல் நிர்­வா­கத்தில் பெண்­களின் பங்­க­ளிப்­பினை பெற்­றுக்­கொள்­வ­தற்கு மேற்­கொள்­ளப்­பட வேண்­டிய மறு­சீ­ர­மைப்­பிற்­கான நகர்­வுகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டதன் விளை­வாக அண்­மையில் இடம்­பெற்ற உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலில் பெண்­களின் பிர­தி­நி­தித்­து­வத்­தினை அதி­க­ரிப்­ப­தற்­கான எமது எதிர்­பார்ப்­பி­னையும் யதார்த்­த­மாக்­கிக்­கொள்ள எம்மால் முடிந்­துள்­ளது. 

மானிட வர்க்­கத்தின் இருப்­பினை உறு­தி­செய்யும் படைப்­பாற்­றலை தன்­ன­கத்தே கொண்ட பெண்கள், மனித நாக­ரி­கத்தின் ஆரம்பம் முதலே போற்­றப்­பட்டு வரு­கின்­ றனர். 

அந்த உயி­ரியல் சிறப்­பி­யல்­பினை விஞ்­சிய சமூகம் சார்ந்த பெறு­ம­தியும் அவர்­க­ளுக்கு இருக்­கின்­றது என்­பதை நவீன கலா­சார மனிதன் புரிந்து கொண்­டுள்ளான். அந்த புரிந்­து­ணர்வை யதார்த்­த­மாக்கும் வகையில், சமூ­கத்தில் பெண்­க­ளுக்கு கிடைக்க வேண்­டிய கௌர­வத்­தையும் அபி­மா­னத்­தையும் வெற்றி கொள்­வ­தற்­காக மேற்­கொள்­ளப்­படும் முயற்­சி­க­ளுக்கு எனது பாராட்­டுக்­களை தெரி­வித்­துக்­கொள்­கின்றேன்.

பெண்­களின் தொழில் முயற்­சி­களை விரு த்தி செய்து நாட்டின் கைத்­தொழில் மற்றும் உற்­பத்தித் துறையில் பெண்­களின் பங்­க­ளிப்­பினை உயர்த்­து­வதே எமது அடுத்த இலக்­காகும். அதற்­கான விசேட கடன் திட்­டங்­களும் தொழிற்­ப­யிற்சி செயற்­திட்­டங்கள் பலவும் அரச மற்றும் அரச சார்­பற்ற மட்­டங்­களில் ஏற்­க­னவே செயற்­ப­டுத்­தப்­பட்டு வரு­கின்­றன. இந்த செயற்­திட்­டங்­களின் இறுதி இலக்கு நாட்டின் மொத்த சனத் ­தொ­கையில் அரை­வா­சிக்கும் அதி­க­மான எண்­ணிக்­கையை கொண்­டி­ருக்கும் பெண் சமூ­கத்தை உய­ரிய சமூக அபி­வி­ருத்­தியை கொண்ட நாட்டின் பங்­கா­ளர்­க­ளாக மாற்­று­வதே ஆகும். வலு­வான பெண்ணே முன்­னேற்­றத்தின் வழி­காட்­டி­யா­கிறாள் எனும் தொனிப்­பொருளில் கொண்­டா­டப்­படும் இவ்­வ­ருட சர்­வதேச மகளிர் தின­மா­னது, இந்த மகத்தான குறிக்கோள் பற்­றிய கலந்­து­ரை­யா­டலை சமூ­கத்தில் ஏற்­ப­டுத்தும் சிறந்ததோர் தளமாக அமையுமென நான் நம்புகிறேன். இந்த உயரிய நோக்கங்களை அடையும் பொருட்டு ஏற்பாடு செய்யப்படும் சகல செயற் திட்டங்களுக்கும் எனது பாராட்டைத் தெரிவி ப்பதுடன், அச்செயற்திட்டங்களுடன் இணைந்து செயற்படும் சகல பெண்களுக் கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன் என்றும் தெரிவித்துள்           ளார்.