உத்­தி­யோ­க­பூர்வ விஜயம் ஒன்றை மேற்­கொண்டு ஐக்­கிய நாடு­களின் அர­சியல் விவ­கா­ரங்­க­ளுக்­கான உதவி பொது செய­லாளர் ஜெப்ரி பெல்ட்மன் இலங்கை வர­வுள்ளார். 

இம்­மாதம் 9 ஆம் திகதி முதல் எதிர்­வரும் 11 ஆம் திகதி வரையில் இவர் இலங்­கையில் தங்கி இருப்பார் என ஐ.நா.  சபையின் செய­லாளர் நாய­கத்தின் ஊடகப் பேச்­சாளர் அறி­வித்­துள்ளார்.  இலங்கை விஜ­யத்­தின் ­போது   ஜனா­தி­பதி, பிர­தமர் உள்­ளிட்ட பல்­வேறு தரப்­பி­ன­ரையும், அர­சியல் கட்­சிகள், சிவில் அமைப்­புகள் என்­ப­வற்றின் பிர­தி­நி­தி­க­ளையும், மதத் ­த­லை­வர்­க­ளையும் சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­துவார். 

அத்­துடன் இலங்­கையில் ஏற்­பட்­டுள்ள அசா­தா­ரண சூழ்­நிலை குறித்தும்  ஐக்­கிய நாடுகள் சபை கவனம்  செலுத்­த­வுள்­ள­துடன்   கலந்­து­ரை­யா­டல்­களை நடத்­த­வுள்ளார். 

ஐக்­கிய நாடுகள் உதவி   அர­சியல் செயலர் ஜெப்ரி பெல்ட்மன் கண்­டிக்கு  விஜயம் செய்­ய­வுள்­ள­துடன் அங்­குள்ள மத தலை­வர்­க­ளு­டனும் கலந்­து­ரை­யாடல் ஒன்றை  நடத்­த­வுள்ளார். அத்­துடன் ஜெனி­வாவில் ஆரம்­ப­மா­கி­யுள்ள ஐக்­கிய நாடுகள் மனித உரிமைப்  பேர­வையின் 37 ஆவது கூட்டத்தொடர் ஆர ம்­பித்­துள்ள நிலையில் ஐக்கிய நாடுகளின் அரசியல் விவகாரங்களுக்கான உதவி பொது செயலாளரின் இலங்கை விஜயம் அமைய வுள்ளது.