அண்மைய நாட்களாக இடம்பெறுகின்ற இனவாத வன்முறை சம்பவங்கள் தொடர்பில் சூத்திரதாரிகளுக்கு எதிராக உடனடியாக நட வடிக்கை எடுக்குமாறும்  அவர்களை  சட்டத்தின் முன் கொண்டுவருமாறும் , பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் இயல்பு நிலையை ஏற்படுத்துமாறும் அதிகாரிகளை ஐக்கியநாடுகள் சபை வலியுறுத்துகிறது என்று ஐக்கியநாடுகள் சபை அறிவித்திருக்கின்றது. 

இது தொடர்பாக  ஐக்கிய நாடுகள் சபையின் கொழும்பு அலுவலகம் தெரிவித்துள்ளதாவது:

இலங்கையில் அண்மைய நாட்களாக இடம்பெறுகின்ற இனவாத வன்முறை சம்பவங்கள் தொடர்பில்  ஆழ்ந்த  கவனம் செலுத்தியுள்ள ஐக்கியநாடுகள் சபை அவற்றை முழுமையாக கண்டிக்கிறது.   இது தொடர்பில் சூத்திரதாரிகளுக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும்  அவர்களை  சட்டத்தின் முன் கொண்டுவருமாறும் , பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் இயல்பு நிலையை ஏற்படுத்துமாறும் அதிகாரிகளை ஐக்கியநாடுகள் சபை வலியுறுத்துகிறது. 

அதுமட்டுமன்றி சட்டத்தின் ஆட்சிப்படுத்தல், மனித உரிமை மற்றும் அனைத்து மக்களினதும் பாதுகாப்பை  உறுதிப்படுத்துமாறும்    ஐக்கிய நாடுகள் சபை  அரசாங்கத்தை   வலியுறுத்துகின்றது.