சவூதி அரேபியாவில்  சரியத் சட்டப்படி போதை பொருள் கடத்தலில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்படும் அந்த வகையில் சவூதி அரேபியாவில் போதை பொருள் கடத்திய குற்றத்திற்காக பாகிஸ்தான் நாட்டவருக்கு நேற்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

மக்கா நகரில் பாகிஸ்தானை சேர்ந்த பதல் ஹாடி குயினஸ் என்பவர் ஹெராயின் என்ற போதை பொருள் கடத்தலில் ஈடுபட்டார் என குற்றச்சாட்டு எழுந்தது.

இதுபற்றி நடந்த விசாரணை முடிவில் பதல் குற்றவாளி என தீர்ப்பு அளிக்கப்பட்டார்.  இதனை சுப்ரீம் கோர்ட்டும் உறுதி செய்தது.  பதலுக்கு மரண தண்டனை விதிக்க உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து பதலுக்கு மரண தண்டனை நிறைவேறியது.  இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் சரியத் சட்டப்படி தண்டிக்கப்படுவார்கள் என உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

போதை பொருளானது தனிநபர் மற்றும் சமூகத்திற்கு கடும் தீங்கு விளைவிக்கும் என்பதனால் அதனை ஒழிப்பதற்கு அரசு தீவிரம் காட்டி வருகிறது என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.