அர­சாங்­கத்­தி­னதும், பொலி­ஸா­ரி­னதும் பாது­காப்பில் முஸ்­லிம்கள் நம்­பிக்கை இழந்தால், தமிழ் இளை­ஞர்கள் ஆயுதம் ஏந்தி அர­சுக்கு எதி­ராக போரா­டி­யது போன்று, முஸ்லிம் இளை­ஞர்­களும் ஆயு­தத்தைத் தூக்க வேண்­டிய நிர்ப்­பந்­தத்தை அர­சாங்கம் உரு­வாக்கி விடக்­கூ­டாது என்று அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாத் பதி­யுதீன் தெரி­வித்தார்.

தற்­பொ­ழுது நாட்டில் ஏற்­பட்­டி­ருக்கும் அசா­தா­ரண சூழ்­நிலை தொடர்பில் பாரா­ளு­மன்­றத்தில் நேற்று  இடம்­பெற்ற விசேட ஒத்­தி­வைப்பு விவா­தத்தில் உரை­யாற்றும் போதே அமைச்சர் இவ்­வாறு தெரி­வித்தார்.

மத ஸ்­த­லங்­க­ளையும் சொத்­துக்­க­ளையும் நாச­மாக்கும் காடை­யர்­க­ளுக்கு வழங்கும் தண்­டனை மூலம் இனி ஒரு­போதும் இவ்­வா­றான சம்­ப­வங்கள் இடம்­பெறக் கூடாது என்ற வகையில் அர­சாங்கம் அம்­பாறை மற்றும் திகன சம்­ப­வங்­களில் சம்­பந்­தப்­பட்ட காவா­லி­க­ளுக்கும் காடை­யர்­க­ளுக்கும் அதி­க­பட்ச தண்­ட­னையை வழங்க வேண்டும் என்று அமைச்சர் உயர்­ச­பையில் வலி­யு­றுத்­தினார். தெல்­தெ­னி­யவில் குமா­ர­சிறி என்ற அப்­பாவி ஒரு­வரின் மர­ணத்­துக்குக் கார­ண­மான முஸ்லிம் பெயரை தாங்­கிய குடி­கா­ரர்­களின் செய­லுக்­காக அப் பிர­தே­சத்தைச் சேர்ந்த முஸ்­லிம்­களை பழி­வாங்­கிய காடை­யர்­களை எது­வித தயவு தாட்­சண்யமுமின்றி சட்­டத்தின் முன்­நி­றுத்தி தண்­டனை வழங்­காத வரை, முஸ்­லிம்கள் இந்த நல்­லாட்­சியில் நம்­பிக்கை வைக்கப் போவ­தில்லை.

நேற்று (5ஆம் திகதி) கண்டி, திகன, கட்­டு­கஸ்­தோட்டை பிர­தே­சங்­க­ளுக்கு நாங்கள் சென்­றி­ருந்த போது இன்னும் அர­சுடன் ஒட்­டிக்­கொண்­டி­ருப்­பது வெட்­க­மில்­லையா என அவர்கள் எம்­மிடம் கேட்கும் போது நாம் எதைத்தான் கூறு­வது?

தெல்­தெ­னி­யவில் மர­ண­மா­ன­வரின் இறுதிச்சடங்­குகள் நடை­பெறும் நாளன்று அங்கு இன­வா­தி­களால் பாரிய அசம்­பா­வி­தங்கள் நிகழ்த்­தப்­பட வாய்ப்­புண்டு என நாங்கள் ஜானா­தி­ப­தி­யி­டமும் பிர­த­ம­ரி­டமும் மீண்டும் மீண்டும் வலி­யு­றுத்­தினோம். 

பொலி­ஸாரும் அதி­ரடிப் படை­யி­னரும் போது­மா­ன­ளவு குவிக்­கப்­பட்­டி­ருப்­ப­தா­கவும் பாது­காப்பு வழங்­கப்­படும் என்றும் எமக்கு உறு­தி­மொழி வழங்­கப்­பட்ட போதும் அவை எல்லாம் பொய்ப்­பிக்­கப்­பட்டு ஓர் இன சங்­கா­ரமே நடந்து முடிந்­தி­ருக்­கின்­றது.

தெல்­தெ­னிய சம்­ப­வத்தில் அந்த ஊரில் வாழும் சிங்­க­ள­வர்­களும் முஸ்­லிம்­களும் புரிந்­து­ணர்­வுடன் சமா­தா­ன­மாகி பாதிக்­கப்­பட்ட குடும்­பத்­துக்கு 15 இலட்சம் ரூபாவும் வழங்­கப்­பட்­டது. எனினும், மஹாசொன் பல­காய என்ற இனவாத இயக்­கத்தைச் சேர்ந்த அமித் வீர­சிறி மற்றும் மட்­டக்­க­ளப்பில் பௌத்த தர்மங்­க­ளுக்கு மாற்­ற­மாக நடந்­து­கொள்ளும் மதகுரு ஒரு­வரும் சேர்ந்தே இந்த அடா­வ­டித்­த­னத்தை நடத்தி அத்­தனை அழி­வு­க­ளுக்கும் கார­ணமாக இருந்­தி­ருக்­கின்­றனர். இவ்­வா­றான கய­வர்­களை கண்­டு­பி­டித்து தண்­டனை வழங்க வேண்டும். 

முஸ்லிம் பெயர்­களைத் தாங்­கிய அந்த குடி­கார இளை­ஞர்­க­ளுக்கு எவ்வகையான தண்­டனையை வழங்­கி­னாலும் முஸ்லிம் சமூகம் அதனை பொருட்­ப­டுத்­த­ப் போவதில்லை. ஊர­டங்குச் சட்­டத்தை பிறப்­பித்து இன­வா­தி­களை சுதந்­தி­ர­மாக வீதி­களில் நட­மாடச் செய்து காட்­டு­மி­ராண்டித்தனத்தை நடத்தி முடித்­தி­ருக்­கின்­றார்கள். 

அதே­போன்று கடந்த வாரம் அம்­பாறை நகரில் ஹோட்டல் ஒன்­றுக்குள் சென்று உல­கத்­தி­லேயே இது­வரை கண்­டு­பி­டிக்­கப்­ப­டாத மருந்­தொன்றை கொத்­து­ரொட்­டிக்குள் போட்­ட­தாக அச்­சு­றுத்தி கூறச் செய்து அதை கார­ணங்­காட்டி அந்த ஹோட்­டலை தகர்த்­த­துடன் அதற்கு வெகு­தொ­லைவிலிருந்த இரு ஹோட்­டல்­களை அடித்து நொறுக்­கி­விட்டு  பள்­ளி­வா­ச­லையும் முற்­றாகச் சேதப்­ப­டுத்­தினர்.

இதில் சம்­பந்­தப்­பட்ட குற்­ற­வா­ளி­களை கைது செய்து ஓரி­ரவு கூட சிறையில் அடைக்­காது ஏற்­க­னவே பதிவு செய்­யப்­பட்ட குற்­றச்­சட்டை வாபஸ் வாங்கி வேறொரு சட்­டத்தின் கீழ் அந்த சந்­தேகநபர்­களின் குற்­றங்­களை பதிவு செய்து நீதி­மன்­றத்தில் பிணை வாங்கிக் கொடுத்­துள்­ளனர். பொலிஸார் ஒருபக்கச் சார்­பா­கவும் நடந்­தி­ருக்­கின்­றனர். 

பார­பட்­ச­மாக நடந்­து­கொண்ட அம்­பாறை பொலி­ஸா­ருக்கு எதி­ராக கடு­மை­யான நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு நாங்கள் பிர­த­ம­ரி­டமும் பொலிஸ்மா அதி­ப­ரி­டமும் வலி­யு­றுத்­தினோம். எமக்கு அவ்­வா­றான உறு­தி­மொழி வழங்­கப்­பட்ட போதும் இன்­று­வரை நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­ட­வில்லை என்­பதை வேத­னை­யுடன் தெரி­விக்­கின்றோம். 

திகன, பள்ளேக­லையில் ஊர­டங்குச் சட்ட நேரத்தில் வீடு­களைக் கொளுத்­தி­யதால் அதற்குள் அப்­பாவி முஸ்லிம் இளைஞர் ஒருவர் சிக்­குண்டு அநி­யா­ய­மாக உயிரை பறி­கொ­டுத்­துள்ளார். 

இந் நாட்டில் முஸ்லிம்கள் செய்த தவறுதான் என்ன? நாட்டின் இறைமைக்காக பாடுபட்டது தவறா? சமாதானம் வரவேண்டுமென நினைத்தது தவறா? நாடு பிளவு படக்கூடாது என்று எண்ணியது தவறா? தமிழர்களுடனும் சிங்களவர்களுடனும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்று நினைப்பது தவறா? ஏன் இந்த சமூகத்தை இவ்வாறு அழிக்கத் துடிக்கின்றார்கள்? முஸ்லிம்களின் சொத்துக்களை நாசமாக்க ஏன் அலைந்து திரிகின்றார்கள் என்று அமைச்சர் பாராளுமன்றில் கேள்வி எழுப்பினார்.