அம்­பாறை பள்­ளி­வாசல் தாக்­கு­த­லை­ய­டுத்து நேற்றும் 10க்கும் மேற்­பட்டோர் விசா­ர­ணைக்­காக அழைக்­கப்­பட்டு துரித விசா­ர­ணையின் பின் மூவர் ­கைது செய்யப்­பட்­டுள்­ள­தாக அம்­பாறை தலை­மைத்­துவ பொலிஸ் பொறுப்­ப­தி­காரி எஸ்.தடல்ல தெரி­வித்தார். 

கைது செய்து தடுத்து வைக்­கப்­பட்ட பல­ரிடம் மேற்­கொண்ட விசா­ர­ணையின் போது வெளியான தக­வல்­களைக் கொண்டே இந்த மூவரும் கைது செய்­யப்­பட்­ட­தாக பொலிஸ் பொறுப்­ப­தி­காரி மேலும் தெரி­வித்தார். அத்­துடன் கைது செய்­யப்­பட்ட மூவரும் இன்று மாலை அம்­பாறை நீதிவான் நீதி­மன்­றத்தில் ஆஜர் செய்­யப்­ப­ட­வி­ருப்­ப­தா­கவும் அவர் மேலும் தெரி­வித்தார்.

பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜய­சுந்­த­ரவின் அதி­ரடி நட­வ­டிக்­கைக்கு இணங்க அம்­பா­றையில் நடை பெற்ற சம்­ப­வங்­களை ஆராய்ந்து சட்­ட­ ந­ட­வ­டிக்கை எடுக்கும் பொருட்டு விஷே­ட­மாக நிய­மிக்­கப்­பட்ட மட்­டக்­க­ளப்பு மாவட்ட பொலிஸ் அத்­தி­யட்­சகர்  எம்.எஸ் மென்டிஸ் தலை­மை­யி­லான குழு­வினரின் தீவிர நட­வ­டிக்­கையின் பிர­கா­ரமே சீசீ­ரீவி பதி­வு­களின் மூலம் கிடைத்த தக­வலின் அடிப்­ப­டை­யி­லேயே இவர்கள் கைது செய்­யப்­பட்­ட­தா­கவும் பொலிஸ் வட்­டா­ரங்கள் தெரி­வித்­தன. 

அத்­துடன் நடை­பெற்று வரும் பொலிஸ் விசா­ர­ணை­களின் அடிப்­ப­டையில் மேலும் பலர் கைது செய்­யப்­ப­டுவர் எனவும் நம்­ப­க­மாக தெரி­ய­வ­ரு­கி­றது. 

இது ஒரு புற­மி­ருக்க தாக்­கு­த­லுக்கு இலக்­கான பள்­ளி­வா­சலில் தற்­போது தொழுகை நட­வ­டிக்­கைகள் இடம்பெற்று வரு­வ­துடன் பள்­ளி­வாசல் வளா­கத்தில் பொலிஸ் காவலரண் மூலம் 24 மணி நேர பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் விஷேட அதிரடிப்படையின் நாளாந்த ரோந்து நடவடிக்கையும் இடம்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.