கண்டி - தெல்­தெ­னிய மற்றும் திகன பகு­தி­களில் முஸ்லிம்­க­ளுக்கு எதி­ரான வன்­மு­றை­க­ளுக்கு எதிர்ப்பு தெரி­வித்து கொழும்பில் முஸ்லிம் இளைஞர்கள் அலரிமாளிகை முன்­பாக நேற்று திடீர் போராட்டம் ஒன்­றினை முன்­னெ­டுத்­தனர். முகநூல் ஊடாக ஒருங்­கி­ணைந்து அலரிமாளிகை நுழை­வாயில் அருகே உள்ள கொள்­ளு­ப்பிட்டி பள்­ளி­வாசல் அருகே கூடிய அவர்கள், சட்டம் ஒழுங்கை நிலை நாட்டி முஸ்­லிம்­களின் உயிர், உட­மை­களை பாது­காக்­கு­மாறு பிர­த­ம­ருக்கு அழுத்தம் கொடுக்கும் வித­மாக இந்த அமைதி போராட்­டத்தை முன்­னெ­டுத்­தனர். 

நேற்று  முன்தினம் இரவு 9.15 மணியளவில் குறித்த இடத்தில் கூடிய முஸ்லிம் இளை­ஞர்கள், முஸ்­லிம்­களின் உடமைக­ளையும் உயி­ர்களையும் பாது­காக்­கு­மாறு  கோஷம் எழுப்­பினர்.

 கொழும்பு வாழ் முஸ்லிம் சமூகம் ஐ.தே.க.வுக்கு வாக்­க­ளித்­தது, இது அவர்கள் மேல் உள்ள நம்­பிக்­கை­யி­லேயே என கோஷ­மெ­ழுப்­பிய இைள­ஞர்கள், அவ்­வா­றான நிலையில் முஸ்­லிம்­களின் உயிரை காக்க வேண்­டி­யது அரசாங்கத்தின் கடமை என கூறி இந்த அமைதி வழி போராட்டத்தை முன்னெடுத்தனர்.