தொடர்ச்­சி­யாக சிறு­பான்மை மக்­க­ளுக்கு எதி­ரான சம்­ப­வங்கள் இடம்­பெற்­றுள்ள நிலையில்  இவற்றை தடுக்கும் வகையில் சட்டம் ஒழுங்கு ஏன் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை.

 சட்டம் நிலை­நாட்­டப்­ப­டு­வதில்  ஏன்  தவ­றி­ழைக்­கப்­பட்­டுள்­ளது? பிர­தமர் இதற்கு என்ன பதில் கூறப்­போ­கின்றார்  என்று எதிர்க்­கட்சி தலைவர் இரா. சம்­பந்தன் சபையில் கேள்வி எழுப்­பினார்.

சம்­ப­வங்­களின் பின்­ன­ணியில் எமக்கு சந்­தேகம் ஏற்­பட்­டுள்­ளது. இவ்­வா­றான சம்­ப­வங்கள் சர்­வ­தேச மட்­டத்தில் பாரிய நெருக்­க­டியை ஏற்­ப­டுத்தும் எனவும் அவர் சுட்­டிக்­காட்­டினார்.

அம்­பாறை, திகனை பகு­தி­களில் இடம்­பெற்ற இன வன்­மு­றைகள் தொடர்­பிலும் அவ்­வா­றான சம்­ப­வங்கள் இனிமேல் இடம்­பெறக் கூடாது  என்­பதை  வலி­யு­றுத்­தியும் ஜே.வி.பி.யின் தலை­வரும் எதிர்க்­கட்சி பிர­தம கொர­டா­வு­மா­கிய அனு­ர­கு­மார திசா­நா­ய­க­வினால் கொண்­டு­வ­ரப்­பட்ட  சபை ஒத்­தி­வைப்பு வேளை பிரே­ரணை மீதான விவா­தத்தின் போதே அவர் இவ்­வாறு குறிப்­பிட்டார். 

எதிர்க்­கட்சித் தலைவர் சம்­பந்தன் இங்கு மேலும் கூறு­கையில்,. 

அண்­மையில் நாட்டில் இடம்­பெற்று வரும் இன­வாத சம்­ப­வங்கள் மிகவும் கண்­டிக்­கத்­தக்க விட­யங்­க­ளாகும். இதில் அம்­பாறை சம்­பவம் தொடர்பில் எமக்கு சந்­தேகம் உள்­ளது. உண­வ­கத்தில் உண­வு­களில் மருந்து கலந்து கொடுக்­கப்­பட்டு வரு­வ­தாக கூறி அதனை அடிப்­ப­டை­யாக கொண்டு  குழப்­பங்கள் ஏற்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. இதன் பின்­ன­ணியில் உள்ள  உண்மைத் தன்மை குறித்து நாம் ஆராய்ந்து பார்க்க வேண்டும். உரிய தரப்­பினர் விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்து அதன் உண்மைத் தன்­மையை ஆராய வேண்டும். 

இந்த சம்­ப­வத்தை அடிப்­ப­டி­யாக வைத்து அம்­பா­றையில் பள்­ளி­வாசல் தாக்­கப்­பட்­டுள்­ளது,  கடைகள் சேத­மாக்­கப்­பட்­டுள்­ளன . அதேபோல் இந்த சம்­ப­வத்தில் பேருந்­து­களில் சந்­தேக நபர்கள் வந்­துள்­ளனர். மோட்­டர்­சைக்­கிள்கள்  பயன்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன .எனினும் இவ்­வா­றான சம்­ப­வங்கள் இடம்­பெற்ற நிலையில் காவல்­து­றை­யினர் உரிய நட­வ­டிக்­கைகள் எடுக்­க­வில்லை. மக்­க­ளுக்கு எதி­ராக கட்­ட­விழ்த்­தப்­பட்ட சம்­ப­வங்கள் இடம்­பெற்ற நிலையில் சட்டம், ஒழுங்கு நிலை­நாட்­டப்­ப­ட­வில்லை. அதேபோல் சில நாட்­க­ளுக்கு முன்னர் கண்­டியில் இதே­போன்­ற­தொரு இன­வாத சம்­பவம் இடம்­பெற்­றுள்­ளது. இதனால் உயி­ரி­ழப்­பு­களும் இடம்­பெற்­றுள்­ளன. இவ்­வா­றான சம்­ப­வங்கள்  பல்­வேறு முரண்­பா­டு­களை தோற்­று­வித்­துள்­ளன. 

கடந்த காலங்­களில் இலங்­கையில் இவ்­வா­றான ஒரு இனத்­துக்­கான அடக்­கு­முறை சம்­ப­வங்கள் இடம்­பெற்­றன. இவ்­வா­றான நிலையில் தான் ஆட்சி மாற்றம் ஏற்­பட்­டுள்­ளது. ஆட்சி மாற்­றத்தின் பின்னர் குறிப்­பிட்ட கால­கட்டம் வரையில் இவ்­வா­றான சம்­ப­வங்கள் இடம்­பெற்­ற­விலை. இப்­போது இன­வாத செயற்­பா­டுகள் இடம்­பெற்று வரு­கின்­றன. இதனை ஏற்­று­கொள்ள முடி­யாது. நல்­லாட்­சியில் இன­வாதம் தூண்­டப்­ப­டு­வதை ஒரு­போதும் பொறுத்­துக்­கொள்­ளவும்  முடி­யாது. இவ்­வா­றான சம்­ப­வங்கள் இடம்­பெறும் நிலையில் சட்­டத்தின் மூல­மாக அவற்றை நாம் கட்­டு­ப­டுத்த வேண்டும். இல்­லை­யென்றால் சட்டம் நீதி எம்மை எதுவும் செய்­யாது என்ற நிலைப்­பாட்டில் இன­வாத குழுக்கள் தொடர்ந்தும் இவ்­வா­றான சம்­ப­வங்­களில் ஈடு­ப­டு­வார்கள். ஆகவே குற்­ற­வா­ளி­க­ளுக்கு எதி­ராக சட்டம் மற்றும் ஒழுங்கு நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட வேண்டும். 

தொடர்ச்­சி­யாக இரண்டு சம்­ப­வங்கள் இடம்­பெற்­றுள்­ளன. ஆனால் இவற்றை தடுக்கும் வகையில் சட்டம் ஒழுங்கு ஏன் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை. சட்­டத்தை நிலை­நாட்­டு­வதில் ஏன்  தவ­றி­ழைக்­கப்­பட்­டுள்­ளது? பிர­தமர் இதங்கு என்ன பதில் கூறப்­போ­கின்றார் என்ற கேள்­வியை நான் அர­சாங்­கத்­திடம் கேட்­கின்றேன். 

உரிய நேரத்தில் சட்டம் ஒழுங்கு நிலை­நாட்­டப்­ப­டா­மையே இவ்­வா­றான விளை­வுகள் ஏற்­ப­டவும் கார­ண­மாக அமைந்­துள்­ளது. ஆகவே வன்­மு­றை­க­ளுக்­கான முழு­மை­யான பொறுப்பை  அர­சாங்­கமே ஏற்­று­கொள்ள வேண்டும். நடு­நி­லை­யாக சட்டம் ஒழுங்கு நிலை­நாட்­டப்­ப­டா­விட்டால் இந்த நாட்டின் நல்­லாட்சி பயணம் எங்கே செல்லும். பிர­தமர் இதற்கு பதில் கூற வேண்டும். அனை­வ­ருக்கும் சமத்­துவம் கிடைக்க வேண்டும். மக்கள் பாது­காக்­கப்­பட வேண்டும். ஆனால் இந்த அர­சாங்கம் எதன் அடிப்­ப­டையில் சட்டம் ஒழுங்கை கையாள்­கின்­றது என்ற கேள்வி எம்­மத்­தியில் எழு­கின்­றது. சிலர் தாங்கள் தான் உயர்ந்­த­வர்கள் என நினைத்­து­கொண்டு ஏனை­ய­வர்­களை  குறைந்த எண்­ணிக்­கை­யி­லான மக்­களை அடி­மைகள் என்ற ரீதியில் நடத்த முயற்­சிக்­கின்­றனர். 

இந்த அர­சாங்­கத்­திலும் தமிழ், முஸ்லிம் மக்­களை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் அமைச்­சர்கள் உள்­ளனர். அவர்­களின் பங்­க­ளிப்பும் உள்­ளது. ஆகவே அவர்­களின் உரி­மைக்­காக அர­சாங்­க­மாக என்ன நட­வ­டிக்­கை­களை எடுக்­கின்­றது என்ற கேள்வி இன்று எழுந்­துள்­ளது. எனவே மக்­களை பாது­காப்­பதில் அர­சாங்­கத்தின் திட்­டங்­களில் மாற்­றங்கள் ஏற்­பட வேண்டும். இந்த நாட்டில் சகல மக்­களும் சமத்­து­வ­மாக பாதுக்­காக்­கப்­ப­ட­வேண்டும். உரி­மைகள் உறு­திப்­ப­டுத்­த­பட வேண்டும். இவ்­வா­றான சம்­ப­வங்­களின் மூலம் சர்­வ­தேச விதி­மு­றைகள் மீறப்­பட்­டுள்­ளன.

பொறுப்­புக்­கூறல் செயற்­பா­டுகள் மீறப்­பட்­டுள்­ளன. இது சர்­வ­தேச தரப்பு மத்­தியில் மிகப்­பெ­ரிய அதி­ருப்­தியை ஏற்­ப­டுத்தும். இந்த நாட்டில் இன­வாதம் மீண்டும் தலை­தூக்க ஆரம்­பித்­துள்­ளது. அதற்கு இட­ம­ளிக்க  முடி­யாது. உரிய நேரத்தில் சட்டம் நிலை­நாட்­டப்­பட வேண்டும். இந்த நாட்டில் இனவாதத்தை பரப்பி முன்னோக்கி செல்ல வேண்டிய நாடாக இல்லாது தொடர்ந்தும் பின்னோக்கி பயணிக்கின்றோம். 

எம்மைவிட பின்னோக்கி இருந்த நாடுகள் அனைத்தும் எம்மைவிடவும் அபிவிருத்தி கண்டு நாட்டின் வளர்ச்சியில் முக்கியத்துவம் செலுத்தும் நிலையில் நாம் இன்றும் இனவாத செயற்பாடுகளில் மூழ்கி செயற்படுவது தடுக்கப்பட வேண்டும். எனவே அரசியல் கட்டமைப்பில் மாற்றங்களை கொண்டுவந்து உரிய அதிகாரிகள் தமது கடமையினை சரியாக முன்னெடுக்க வேண்டும். பிரதமர் இந்த விடயத்தில் உடனடியாக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.