மூளையின் நினைவுகளை அழித்து நோய்களை எதிர்த்துப் போராட வைக்கும் மைக்ரோ சிப்

Published By: Priyatharshan

06 Mar, 2018 | 05:41 PM
image

பிரையன் ஜோன்சனுடைய கெர்னல் நிறுவனம் மூளையில் பொருத்தப்படும் ஒரு மைக்ரோ சிப்பை உருவாக்கி வருகின்றது. 

இந்த‌ சிப்களை வைத்து மக்கள் தமக்கு தேவையான போது நினைவுகளை வாங்கவும், அழிக்கவும் அனுமதிக்கும். பணக்காரர்களுக்கென்று மாத்திரம் ஒதுக்கப்படாமல், இந்த‌ சிப்கள் 'ஸ்மார்ட் போன்களைப் போலவே அனைவரும்' பெறமுடியும் என‌ பிரையன் ஜோன்சன் தெரிவித்தார்.

மனித மருத்துவ பயன்பாட்டிற்காக‌, மூளையில் பொருத்தப்படும் சாதனங்களின் முன்மாதிரிகளை கெர்னல் நிறுவனம் தற்போது செய்து வருகிறது. வலிப்பு நோயாளிகளுடன் சோதனைகள் நடத்தி நல்ல ஆரம்ப முடிவுகளை பெற்றுள்ளது.

மேலும் இந்த‌ சிப்களை பொருத்தும் தொழில் நுட்பத்தினை வ‌ணிகமயமாக்கும் நோக்கத்துடன் முன்னோக்கி செல்ல உள்ளதாகவும் , ஆரோக்கியமான மக்களிடம் சென்றடையும் முன்னர் , அல்சைமர் போன்ற மூளைச் சிதைவு நோய்களால் பாதிக்கப்பட்ட மக்களின் நினைவகத்தை மேம்படுத்துவதற்கு இந்த‌ சிப்கள் ப‌யன்படுத்தப்படுமென நம்புவதாக‌ பிரையன் ஜோன்சன் தெரிவிக்கிறார்.

நீங்கள் மூளையில் சேமித்த‌ நினைவுகளை அழிக்கவும் மற்றும் நோய்களை எதிர்த்து போராடவும் செய்ய‌ வைக்கின்ற‌ பிரெயின் சிப்பானது இன்னும் 15 ஆண்டுகளில் சூப்பர் ஹீரோக்களின் ஒரு புதிய இனத்தை உருவாக்க உள்ளது.

மனித மூளையில் இந்த மைக்ரோ சிப்களை பொருத்துவதன் மூலம் மனிதனின் செயல் திறன் பன்மடங்கு அதிகரிக்கும் என்று கெர்னல் நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மனித உரிமைகளை வலுப்படுத்த விரும்பும் இளைஞர்களின்...

2024-03-18 16:04:18
news-image

சமாதானத்தை ஜனநாயகத்தை வலுப்படுத்துவதில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தினையும்...

2024-03-18 11:46:14
news-image

செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தும்போது ஒழுக்கவியல் சார்ந்த...

2024-03-15 15:43:14
news-image

டிக்டொக்கை பின்னுக்குத் தள்ளிய இன்ஸ்டாகிராம்

2024-03-11 10:13:06
news-image

மனித மூளையில் ‘சிப்’ ; எலான்...

2024-01-30 13:16:57
news-image

“மூன் ஸ்னைப்பர்” வெற்றிகரமாக தரையிறங்கியது :...

2024-01-19 21:59:46
news-image

எதிர்காலத்தை ஆளப்போகும் செயற்கைநுண்ணறிவு

2023-11-22 15:47:57
news-image

வட்ஸ் அப்பில் ஒரே நேரத்தில் இரண்டு...

2023-10-21 12:02:07
news-image

ஸ்னாப் செட்டின் புதிய செயற்கை நுண்ணறிவு...

2023-10-07 11:02:07
news-image

கூகுளுக்கு இன்று வயது 25

2023-09-27 10:36:57
news-image

ஏகத்துவத்தை நோக்கி தொழில்நுட்பத்தில் வேகமாக மாற்றமுறும் ...

2023-09-22 18:33:26
news-image

சமூக வழிகாட்டுதல்கள் பற்றிய விழிப்புணர்வை இலங்கையில்...

2023-08-28 20:48:26