நிலக்கண்ணிவெடி அகற்றுவதற்கு பொறுப்பான ஐ.நா.வின்  விசேட தூதுவர் இளவரசர் மிரெட் ராட் அல் ஹூஸைன், இன்று கிளிநொச்சி, முகமாலை கண்ணிவெடி அகற்றும்   பிரதேசங்களை சென்று பார்வையிட்டார்.

இன்று காலை பத்துமணியளவில் குறித்த பகுதிகளுக்கு விஜயம் செய்த அவர் பணிகளை முன்னெடுக்கின்ற  அதிகாரிகளுடன் நிலைமைகள் தொடர்பில் உரையாடியதுடன் கண்ணிவெடி அகற்றுகின்ற பகுதிகளையும் நேரில் சென்று பார்வையிட்டார்.

இதன் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் ,

தான் இரண்டு நாட்களாக இவ் கண்ணிவெடி அகற்றும் பணிநடைபெறும் இடங்களை பார்வையிட்டு வருவதாகவும் இது தொடர்பில் இலங்கை பிரதமர் மற்றும் அமைச்சர்கள் உயர் அதிகாரிகளுடன் பேசியதாகவும் இதற்கு அவர்கள் சிறந்த ஒத்துழைப்பினை வழங்கினார்கள் அவர்களுக்கு  நன்றி தெரிவித்ததுடன் கண்ணிவெடிகள் உள்ளபகுதிகளில் குறைந்த காலைத்திற்குள் கண்ணிவெடிகள்  அகற்றப்படும் என நம்புவதுடன் அப் பகுதிகளுக்கு மக்கள் மீள்குடியேற்ற படுவார்கள் எனவும் தெரிவித்தார்.