இந்தியாவின்  உத்திரபிரதேச மாநிலத்தில் இளைஞர் ஒருவர் தகாத உறவு வைத்து இருப்பதாக கூறி சிறுநீரை குடிக்க வைத்த சம்பவம்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்திரப் பிரதேச மாநிலம் சஹரன்பூர் என்ற ஊரை சேர்ந்த இளைஞர் ஒருவர் அதே ஊரில் வசிக்கும் பெண்ணுடன் கள்ள தொடர்பு வைத்து வந்ததாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக அந்த கிராமத்தினர் பஞ்சாயத்தில் இளைஞரிடம் விசாரித்துள்ளனர். அதற்கு அவர் பெண்ணை பற்றி  எதுவும் தெரியாது என்று தெரிவித்துள்ளார். இதனை நம்பாத பஞ்சாயத்தினார் அவரை அடித்து துன்புறுத்தி சிறுநீர் குடிக்க வைத்து சித்ரவதை செய்துள்ளனர்.

இதனால் மனமுடைந்து போன அந்த இளைஞர் தற்கொலை செய்வதற்கு முயற்சித்துள்ளார். அப்போது அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு வைத்தியசாலையில்யில் சேர்த்துள்ளனர்.