கணவரின் கள்ளத்தொடர்பு மற்றும் வரதட்சணை கொடுமை காரணமாக சென்னையை சேர்ந்த இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா- சென்னை பாரிமுனை பகுதியில் 25 வயதான தாதி ஆவடியைச் சேர்ந்த கணினி பொறியியலாளரை  கடந்த 2016ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டுள்ளார். தற்போது அவர்களுக்கு வைசாலி என்ற ஒரு வயது பெண் குழந்தை உள்ளது.

தனது கணவருக்கும் அவரது சக ஊழியருக்கும் இடையில் கள்ளத் தொடர்பு இருப்பது தெரிய வரவே குறித்த பெண்ணின் வாழ்வில் புயல் வீச ஆரம்பித்துள்ளது.

மேலும் கணவரது குடும்பத்தினர் வரதட்சணை கேட்டும் கொடுமை செய்துள்ளனர்.

இதனால் மனமுடைந்த குறித்த பெண் தனது பெற்றோரிடம் முறையிட்டதைத் தொடர்ந்து பெற்றோர் சமரசம் செய்து மீண்டும் கணவர் வீட்டிற்க அனுப்பி வைத்துள்ளனர்.

இந் நிலையில் மீண்டும் கணவர் குறித்த பெண்னை தகாத வார்ததைகளால் திட்டி அடித்து கொடுமை படுத்தியுள்ளார்.

எனவே கடந்த சனிக்கிழமை தோழியின் வீட்டிற்கு செல்வதாக கூறி விட்டு தாம்பரத்திலிருந்து கடற்கரை செல்லும் ரயிலில் குறித்த பெண் ஏறியுள்ளார்.

அப்போது கணவருடன் ஏற்பட்ட பிரச்சனை குறித்து தனது தாயிடம் அவர் கூறி அழுதுள்ளார். மேலும் தான் தற்கொலை செய்து கொள்ளப்போவதாகவும், குழந்தையை பார்த்துக்கொள்ளுமாறும் கூறிவிட்டு தொலைப்பேசி அழைப்பை துண்டித்துள்ளார்.

அதன்பின்  அடையாறு ஆற்றின் மீது ரயில் சென்ற போது திடீரென குறித்த பெண்  கீழே குதித்துள்ளார். இதைக்கண்ட சக பயணிகள்  ரயில் அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தியுள்ளனர்.

ஆனாலும் அதற்குள் நீரில் மூழ்கி குறித்த பெண் இறந்துவிட்டார்.அதன்பின் தீயணைப்புத் துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

குறித்த பெண்ணின் குடும்பத்தார் தனது மகளின் சாவிற்கு காரணமான மகளின் கணவரையும் அவரது குடும்பத்தாரையும் கைது செய்து தண்டிக்கும்படியும் தனது மகளின் குழந்தையை தங்களிடம் மீட்டுத் தருமாறும் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

தங்களுக்க கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைய பொலிஸார் குறித்த பெண்ணின் கணவரையும் அவரது குடும்பத்தாரையும் கைது செய்து  அவர்களுக்கெதிராக வழக்கப் பதிவு செய்துள்ளனர்.