வழமைக்கு மாறாக இன்று கிளிநொச்சியில் அதிக பனிமூட்டமாக காணப்பட்டது. பகல் வேளைகளில் அதிக வெப்ப நிலையும் இரவு தொடக்கம் காலை வரை அதிக பனி மூட்டமும் காணப்படுகிறது.

ஒரளவுக்க மலைநாட்டுப் பிரதேசங்கள் போன்று கிளி நொச்சியின் இன்றைய காலைப் பொழுது காணப்பட்டது.

காலை பாடசாலை மாணவர்கள் மற்றும் பல்வேறு பணிகளுக்கு செல்லும்  மக்கள் சிரமங்களுக்குள்ளாகினர்.

சில இடங்களில் பேரூந்து அருகில் வரும்வரைக்கும் தெரியாமல் இருக்கும் அளவுக்கு பனி மூட்டம் நிலவியது.