சுனா­மியால் பாதிக்­கப்­பட்ட மரு­த­முனை 65 மீற்றர் மக்­க­ளுக்­காக மேட்­டு­வட்­டையில் கட்­டப்­பட்ட வீடு­களை கைய­ளிப்­ப­தற்­கான பெயர் ­பட்­டி­யலை அம்­பாறை மாவட்ட அர­சாங்க அதிபர் செய­லகம் வெளியிட்­டுள்­ளது.

அம்­பாறை மாவட்ட அர­சாங்க அதிபர் துஷித பி. வனி­க­சிங்­க­வினால் அனுப்­பப்­பட்­டுள்ள 78 பேரு­டைய பெயர் ­பட்­டி­யலை கல்­முனை பிர­தேச செய­லாளர் எம்.எச்.எம்.கனி மரு­த­மு­னை­யி­லுள்ள பொது இடங்­களில் காட்­சிப்­ப­டுத்­தி­யுள்ளார்.

நேர்­மு­கப்­ப­ரீட்­சையின் மூலம் தெரிவு செய்­யப்­பட்டு வெளியா­கி­யுள்ள இப்­பெ­யர் ­பட்­டி­யலில் ஆட்­சே­ப­னைகள் ஏதும் இருப்பின் 14 நாட்­க­ளுக்குள் எழுத்து மூல­மாக அறி­விக்­கு­மாறு பிர­தேச செய­லாளர் பொது­மக்­களை கேட்­டுள்ளார்.

பட்­டி­யலில் இடம்­பெற்­றுள்ள பெயர்கள் தொடர்பில் ஒழுங்­கீனம் இடம்­பெற்­ற­தாக சுட்­டிக்­காட்­டப்­படும் போது அப் பெயர்கள் நீக்­கப்­பட்டு மீத­மா­ன­வர்­க­ளுக்கு வீடுகள் வழங்­கப்­படும். நிரா­க­ரிக்­கப்­ப­டு­கின்ற வீடுகள் தொடர்பில் மீண்டும் ஆராய்ந்து மறு சுற்றில் எஞ்­சிய வீடு­களை வழங்க நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என பிர­தேச செய­லாளர் அறி­வித்­துள்ளார். சுனா­மியால் பாதிக்­கப்­பட்ட மரு­த­முனை மக்­க­ளுக்­காக கட்­டப்­பட்ட 178 வீடு­களில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக வழங்கப்பட்ட வீடுகள் போக மீதமானவற்றினை கையளிப்பதற்கான பெயர் பட்டியலே தற்போது வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத் தக்கது