பல்­க­லைக்­க­ழ­கங்கள் மானி­யங்கள் ஆணைக்­கு­ழு­வுக்கு முன்னால் இன்று கவ­ன­யீர்ப்பு போராட்டம்

Published By: Robert

06 Mar, 2018 | 10:14 AM
image

தொடர்ச்­சி­யாக 06 நாட்­க­ளாக அனைத்து பல்­க­லைக்­க­ழ­கங்­க­ளிலும் பணிப்பகிஷ்­க­ரிப்பில் ஈடு­பட்­டு­ வரும் கல்வி சாரா ஊழி­யர்கள் இன்று 6ஆம் திகதி செவ்­வாய்க்­கி­ழமை பல்­க­லைக்­க­ழ­கங்கள் மானி­யங்கள் ஆணைக்­கு­ழுவின் அலு­வ­ல­கத்­திற்கு முன்னால் கவ­ன­யீர்ப்பு போராட்­டத்தில் ஈடு­ப­ட­வுள்­ள­தாக தென்­கி­ழக்கு பல்­க­லைக்­க­ழக ஊழியர் சங்­கத்தின் செய­லாளர் வை. முபாறக் தெரிவித்தார்.

அனைத்து பல்­க­லைக்­க­ழக ஊழி­யர்­களும் கொழும்பு பல்­க­லைக்­க­ழ­கத்­தி­லி­ருந்து பல்­க­லைக்­க­ழ­கங்கள் மானி­யங்கள் ஆணைக்­குழு அலு­வ­ல­கத்தை நோக்கி பேர­ணி­யாகச் சென்று அங்கு கவ­ன­யீர்ப்பு போராட்­டத்தில் ஈடு­ப­ட­வுள்­ள­தாக அவர் மேலும் தெரிவித்தார்.

அனைத்து பல்­க­லைக்­க­ழக தொழிற்­சங்க சம்­மே­ளனம் ஏற்­பாட்­டில்­ அ­னைத்து பல்­க­லைக்­க­ழ­கங்­க­ளிலும், பல்­க­லைக்­க­ழக மானி­யங்கள் ஆணைக்­ழுவின் ஊழி­யர்கள் உள்­ளிட்ட உயர்­கல்வி நிறு­வ­னங்­களில் பணி­பு­ரியும் அனைத்து ஊழி­யர்­களும் ஒன்­றி­ணைந்து தொடர்ச்­சி­யான வேலை­நி­றுத்தப் போராட்­டத்தில் கடந்த 28ஆம் திகதி புதன்­கி­ழமை முதல் ஈடு­பட்டு வரு­வ­தா­கவும் அவர் தெரிவித்தார்.

மொழித்­தேர்ச்சி கொடுப்­ப­னவு, காப்­பு­றுதி சேவைகள், சொத்­துக்­க­ளுக்­கான கடன் எல்­லையை அகற்­றுதல், உரிய ஓய்­வூ­திய முறையை உரு­வாக்­குதல், பதவி உயர்­வு­க­ளுக்­கான வரை­ய­றை­களை நீக்­குதல், சம்­பள உயர்­வு­களில் காணப்­படும் வேறு­பா­டு­களை நீக்­குதல், ஆட்­சேர்ப்பு நடை­மு­றைகள் என்­ப­வற்­றிற்கு தீர்­வுகள் வழங்­கப்­ப­ட­வேண்டும். இக் கோரிக்­கை­க­ளுக்கு இதுவரையில் சரி­யான தீர்வு வழங்­கப்­ப­ட­வில்லை எனவும் இக் கோரிக்­கை­களை நிறை­வேற்­று­மாறு கோரி­யுமே இப் பணிப்­ப­கிஷ்­க­ரிப்பில் ஈடு­பட்­டுள்­ள­தா­கவும் அவர் கூறினார்.

மேற்­படி கோரிக்­கைகள் தொடர்­பாக உயர் கல்வி அமைச்சோ, பல்­க­லைக்­க­ழக மானி­யங்கள் ஆணைக்­கு­ழுவோ எவ்­வித தீர்வும் வழங்­க­வில்­லை­யெ­னவும் இத­னை­ய­டுத்தே அனைத்து பல்­க­லைக்­க­ழ­கங்கள் மற்றும் உயர்­கல்வி நிறு­வ­னங்­களை பிர­தி­நி­தித்துவப்­ப­டுத்தும் 24 தொழிற்­சங்­கங்கள் இணைந்து தொடர்ச்­சி­யான வேலை நிறுத்­தத்தில் ஈடு­பட்டு வருவதாக செயலாளர் வை. முபாறக் மேலும் கூறினார்.

கல்வி சாரா ஊழியர்களின் தொடர்ச்சியான பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக பல்கலைக்கழகங் களின் செயற்பாடுகள் ஸ்தம்பிதம் அடைந்துள்ள தோடு சில பரீட்சைகளும் பிற்போடப்பட்டுள்ள தாக பல்கலைக்கழக நிருவாகத்தினர் தெரிவித்த னர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53