இலங்­கையில் வரு­டாந்தம் 1700 சிசு மர­ணங்கள் சம்­ப­விக்­கின்­றன. இவை தாயின் கரு­வ­றையில் சிசு உரு­வாகி 28 வாரங்­களின் பின் ஏற்­படக்கூடிய கருச்­சி­தை­வினால் ஏற்­ப­டக்­கூ­டி­ய­ன­வாகும். குழந்தை பிறந்து முதல் வாரத்­திற்குள் 1550 சிசு மர­ணங்கள் சம்­ப­விக்­கின்­றன என்று சுகா­தார சேவைகள் பணிப்­பாளர் வைத்­தியர் அனில் ஜாசிங்க தெரி­வித்தார். 

சுகா­தார பணி­ம­னையில் உலக பிறவி குறை­பா­டுகள் தினத்தை முன்­னிட்டு இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்­பின்­போதே அவர் இவ்­வாறு தெரி­வித்தார். 

அங்கு அவர் தொடர்ந்தும் தெரி­விக்­கையில், 

தாய் அல்­லது தந்­தையின் பரம்­ப­ரையில் காணப்­படும் குறை­பா­டு­களே  சிசு மர­ணங்­க­ளுக்கு பிர­தான கார­ணங்­க­ளாகும். ஆரோக்­கி­ய­மற்ற, வலது குறைந்த  குழந்­தைகள் பிறக்க கர்ப்­பி­ணியின் சூழல், தாயிடம் காணப்­படும் நோய்கள், மன­நிலை, பாவிக் கும் மருந்து வகை­களின் தாக்கம் என்­பன கார­ண­மா­கின்­றன. அதே­வேளை 35 சத­வீ­த­மான சிசு மர­ணங்கள் ஏற்­ப­டு­வ­தற்­கான கார­ணங்கள் இது­வ­ரையில் கண்­ட­றி­யப்­பட­வில்லை. இத்­த­கைய  கருச்­சி­தை­வா­னது ஆண்­டுக்கு சுமார் 100000 கர்ப்­பிணி தாய்­மா­ருக்­கி­டையே நிகழ்­கின்­றது. 

கரு­வுற்ற தாய் தனது குழந்­தையின் பிர­சவம் தொடர்பில் அக்­க­றை­யுடன் இருக்க வேண்டும். இதில் பெரும்­பா­லான தாய்மார் தனது உடல் ஆரோக்­கியம் குறித்து அக்­கறை காட்டும் அதே­வேளை தனது உள ஆரோக்­கியம் தொடர்பில் அக்­கறை கொள்­வ­தில்லை. 

இதனால் பிறக்கும் குழந்தை ஆரோக்­கி­ய­மற்­ற­தா­கவும்  உடல் உபா­தை­க­ளுக்கு ஆளான குழந்­தை­யா­கவும்  பிறக்­கின்­றன. சில தாய்­மார்கள் மது அருந்தும் பழக்­க­மு­டை­ய­வர்­க­ளாயின் பிறக்கும் குழந்தை கண்கள் ஒடுங்­கி­ய­வாறும் வாயின் மேலு­தடு சற்று தூக்­கிய நிலை­யிலும் பிறக்க வாய்ப்­புண்டு. ஆனால் இத்­த­கைய குழந்­தைகள் ஆரோக்­கி­ய­மா­ன­வர்கள் என நினைக்­கின்­றார்கள். ஆனால் அவையும் ஒரு­வித குறை­பா­டு­க­ளாகும் எனப் பல­ருக்குத் தெரி­வ ­தில்லை. 

மேலும் பரம்­ப­ரையில் ஏதேனும் ஒரு குழந்தை பிறந்து சில நாட்­களில் இறக்­கு­மாயின் அல்­லது ஏதேனும் குறை­பா­டு­க­ளோடு பிறந்து இறக்­கு­மாயின் அவ்­வாறு இறந்த குழந்­தை­களை கட்­டாயம் மர­பணு சோத­னைக்கு உட்­ப­டுத்த வேண்டும். ஆனால் பொது மக்கள் அதை விரும்­பு­வ­தில்லை. மூடநம்­பிக்­கை­க­ளினால் தனது அடுத்த பிர­ச­வத்­தையும் முறை­யாக செய்ய முடி­யாமல் ஆரோக்­கி­ய­மான குழந்­தையை பெற்­றெ­டுக்க தவ­று­கின்­றனர். 

மர­பணு சோதனை செய்­வ­த­னூ­டாக குழந்தை இறக்க காரணம் என்ன, அடுத்த குழந்­தைக்கும் அதே மாதி­ரி­யான பிரச்­சி­னைகள் ஏற்­ப­டுமா போன்ற பல கேள்­வி­க­ளுக்­கான தீர்­வினை கண்­ட­றி­யலாம். 

எனவே குழந்தை பிறப்பு தொடர்பில் தாய், தந்தை விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம். மேலும்  தனது கர்ப்ப காலத்தில் பிரசவம் தொடர்பில் வைத்தியர்களால் முன்வைக்கப்படும் ஆலோசனை களை கேட்டு அவர்களால் பரிந்துரைக்கப்படும் மாத்தி ரைகளை மட்டுமே உட்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.