வெலிக்­கடை சிறைச்­சா­லைக்குள் கடந்த 2012 ஆம் ஆண்டு இடம்­பெற்ற கல­வரம் மற்றும் அதன்­போது கொலை செய்­யப்­பட்ட 27 கைதிகள் தொடர்­பி­லான விசா­ர­ணைகள் குற்றப் புல­ன­ாய்வுப் பிரி­வி­னரால் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ள­தாக கூறப்­படும் நிலையில்,  அது தொடர்பில் விசா­ரணை செய்யக் கோரும் ரிட் மனுவை கொழும்பு மேன்முறை­யீட்டு நீதி­மன்றம் நேற்று  தள்­ளு­படி செய்­தது. 

வெலிக்­கடை கல­வ­ரத்தின் பிர­தான சாட்­சி­யாளர் ஒரு­வ­ரினால் தாக்கல்  செய்­யப்­பட்ட மனுவே, தற்­போது விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்பட்­டுள்­ளதை கார­ண­மாக கொண்டு, மேன்முறை­யீட்டு நீதி­மன்ற தலைமை நீதி­பதி ப்ரித்தி பத்மன் சுர­சேன, சிரான் குண­ரத்ன ஆகி­யோ­ர­டங்­கிய நீதி­ப­தி­களால் தள்­ளு­படி செய்­யப்பட்­டது.

 கடந்த 2012 நவம்பர் மாதம் வெலிக்­கடை சிறையில் இடம்­பெற்ற கல­வரம் மற்றும் அதில் கொல்­லப்பட்ட 27 பேர் தொடர்பில் விப­ர­மான விசா­ரணை ஒன்­றினை முன்­னெ­டுக்க பொலிஸ்மா அதி­ப­ருக்கும் குற்றப் புல­னா­ய்வுப் பிரிவின் பணிப்­பா­ள­ருக்கும் உத்­த­ர­விடக் கோரும் ரிட் மனு நேற்று விசா­ர­ணைக்கு வந்த போதே, அம்­மனு இவ்­வாறு தள்­ளு­படி செய்­யப்பட்­டது.

நேற்­றைய விசா­ர­ணை­களின் போது மன்றில் பிர­சன்­ன­மா­கி­யி­ருந்த சிரேஷ்ட அரச சட்­ட­வாதி மாதவ தென்­னக்கோன், இந்த விவ­கா­ரத்தில்   தற்­போதும்  குற்றப் புல­ன­ாய்வுப் பிரிவு விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்­துள்ள நிலையில் இந்த மனுவை முன்கொண்டு செல்ல  வேண்டிய தேவை இல்லை. என்றார்.

 இதனை ஆராய்ந்த மேன்முறையீட்டு நீதிமன்றம் அவ்வழக்கை தள்ளுபடி செய் தது.