சிலாபம் - இரணவில, பகுதியில் 10 வயது சிறுவனை கடத்தி கொலை செய்த நபரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

10 வயதுடைய சுசித் நிர்மல் என்ற சிறுவனை கடத்திச் சென்று துஷ்பிரயோகத்திற்குட்படுத்தி கொலை செய்த சந்தேகத்தின் பேரில் நபரொருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் நேற்று முல்லைத்தீவில் வைத்து கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரை சிலாபம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது எதிர்வரும் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.