இந்தியாவில் தனது பேரனை காதலித்த பேத்தியை அவரது தாத்தா மிரட்டி கற்பழித்து கர்ப்பமாக்கிய விவகாரம் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்தியா - திருப்பூர் மாவட்டம், தாராபுரம் பகுதியில் இளம் பெண் படித்துவிட்டு வீட்டில் இருந்துள்ளார். அவரது தாய் சமீபத்தில் மரணமடைந்து விட்டார்.

இந்நிலையில் அவரது வயிற்றில் சில மாற்றங்கள் ஏற்பட அதுபற்றி உறவினர்கள் விசாரித்துள்ளனர். ஆனால் வேறு ஏதேனும் கூறி அப்பெண் சமாளித்து வந்த நிலையில் நேற்று முன் தினம் அப்பெண்ணிற்கு வயிற்று வலி ஏற்பட அப்பெண்ணை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

வைத்தியசாலையில் அனுமதித்த பெண்னை பரிசோதித்த வைத்தியர்கள் 6 மாதம் கர்ப்பமாக இருப்பதாக கூறியுள்ளனர்.

இதுகேட்டு அதிச்சியடைந்த உறவினர்கள் அப்பெண்ணிடம் விசாரித்த போது,

அதேபகுதியை சேர்ந்த சாரதி  மனோஜ்குமார் தன்னை காதலிப்பதாக கூறி தன்னிடம் உல்லாசம் அனுபவித்தார் என அந்த சிறுமி கூறியுள்ளார்.

இதையடுத்து உறவினர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

குறித்த நபரிடம் பொலிஸார்  விசாரித்த போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியது. அதாவது அந்த சிறுமியின் கர்ப்பத்திற்கு தான் மட்டும் காரணமல்ல. தனது 55 வயதான தாத்தாவும்  இதற்கு காரணம் என்ற அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார்.

இதையடுத்து இளம் பெண்ணிடம் பொலிஸார் விசாரணை நடாத்திய போது,

தன்னுடைய காதலுனுடன் பேச தனது தந்தையின் சித்தப்பாவின் தொலைப்பேசியை தான் பயன்படுத்தியதாகவும் அதன் மூலம் காதலனுடன் தான் உல்லாசமாக இருந்தது தந்தையின் சித்தப்பாவிற்கு தெரிய வர அதை வெளியே கூறாமல் இருக்க தன்னுடனும் உல்லாசமாக இருக்க வேண்டும் என மிரட்டி அச்சிறுமியை அவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

மேலும் மனோஜ்குமாரை உனக்கு திருமணம் செய்து வைக்கிறேன் என ஆசை வார்த்தை கூறி பலமுறை  சிறுமியை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தியுள்ளார்.

சந்தேக நபர்கள் இருவரையும் பொலிஸார் கைது செய்து  சிறைக்காவலில் வைத்துள்ளனர். மேலும் சிறுமிக்கு  டி.என்.ஏ சோதனை செய்து அக்குழந்தையின் தந்தை யார் என்பதை கண்டுபிடிக்க பொலிஸார் நீதி மன்றத்தினூடாக நடவடிக்கை எடுத்துள்ளனர்.

குறித்த சந்தேகத்திற்டகிடமான சிறுமியின் தந்தையின் சித்தப்பா மனோஜ்குமாரிற்கு உறவு முறையில் தாத்தா என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.