"ஜும்ஆத் தொழு­கைக்கு செல்­வதை கட்­டுப்­ப­டுத்தும் சுற்­று­நி­ரு­பத்தை ரத்து செய்யவும்"

Published By: Robert

05 Mar, 2018 | 10:13 AM
image

முஸ்லிம் அரச ஊழி­யர்கள் வெள்­ளிக்­கி­ழ­மை­களில் ஜும் ஆத் தொழு­கைக்கு செல்­வது தொடர்பில் பொது நிர்­வாக அமைச்சு வெளி­யிட்­டுள்ள சுற்­று­நி­ருபம் உட­ன­டி­யா­க­ இ­ரத்து செய்­யப்­பட வேண்டும் என ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விடம் இலங்கை கல்வி நிர்­வாக சேவை அதி­கா­ரிகள் சங்கம் கோரிக்கை விடுத்­துள்­ளது.

இது தொடர்­பாக சங்­கத்தின் செய­லாளர் ஏ.எல்.எம்.முக்தார் ஜனா­தி­ப­திக்கு அனுப்பி வைத்­துள்ள மக­ஜரில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது;

இலங்­கையின் ஒவ்­வொரு பிர­ஜை­யி­னதும் மத சுதந்­திரம் என்­பது அர­சி­ய­ல­மைப்பில் அடிப்­படை உரி­மை­களில் ஒன்­றாக உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கி­றது. இது அர­சி­ய­ல­மைப்பின் 14 ஆம் அத்­தி­யாயம் 1 (2) பிரி­விலும் தெளி­வு­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

இந்­நி­லையில் நிறு­வனத் தலை­வர்­களின் தீர்­மா­னத்­திற்­க­மை­வாக நிறு­வன செயற்­பா­டு­க­ளுக்கு தடை ஏற்­ப­டாத வகையில் முஸ்லிம் அரச ஊழி­யர்­க­ளுக்கு வெள்­ளிக்­கி­ழ­மை­களில் ஜும்ஆத் தொழு­கையை நிறை­வேற்­று­வ­தற்­காக இரண்டு மணி நேர விசேட விடு­முறை வழங்­கப்­ப­டலாம் என பொது நிர்­வாக அமைச்சின் 21/2016 ஆம் இலக்க சுற்­று­நி­ருபம் மூலம் அறி­வு­றுத்தல் வழங்­கப்­பட்­டுள்­ளது.

அதே­வேளை இந்த சுற்­று­நி­ருபம் தாபனக் கோவையின் Xii ஆம் அத்­தி­யாயம் 12:1 க்கு திருத்­த­மாக சமர்ப்­பிக்­கப்­பட்ட அமைச்­சரவை பத்­தி­ரத்தை அண்­மையில் அமைச்­ச­ரவை அங்­கீ­க­ரித்­துள்­ளது.

இந்­ந­ட­வ­டிக்­கை­யா­னது முற்­று­மு­ழு­தாக இலங்கை அர­சி­ய­ல­மைப்பின் அடிப்­படை உரி­மையை மீறும் செயல் என்­ப­துடன் அர­சி­ய­ல­மைப்பின் மூலம் உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள மத சுதந்­தி­ரத்தை கட்­டுப்­ப­டுத்­து­வ­தாக அமைந்­துள்­ளது.

எனவே முஸ்லிம் அரச ஊழி­யர்­களின் அடிப்­படை உரி­மையை மீறும் வகையில் வெளி­யி­டப்­பட்­டுள்ள இந்த சுற்­று­நி­ரு­பத்தை உட­ன­டி­யாக வாபஸ் பெற்று, முஸ்லிம் ஊழி­யர்­க­ளுக்கு பாதிப்­பில்லாத வகையில் புதிய சுற்றுநிருபம் ஒன்றை வெளியிடுமாறு கோரிக்கை விடுக்கின்றோம். இல்லையேல் நீதிமன்றம் சென்று அதனை சவாலுக் குட்படுத்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும் எனவும் அறியத்தருகின்றோம்" என்று அந்த மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளது.-- 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:14:14
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53