தமி­ழர்கள் சுய­நிர்­ணய உரி­மையை பெறும் முயற்­சியில் இந்­தி­யா­வு­ட­னான நட்பு, அர­சியல் இரா­ஜ­தந்­திரம் அவ­சியம்

Published By: Robert

05 Mar, 2018 | 12:07 PM
image

இன்­றைய பூகோள அர­சி­யலில் இந்­தி­யா­வுக்கு இருக்­கின்ற முக்­கி­யத்­து­வத்தின்   அடிப்­ப­டையில் தமிழ் மக்­க­ளுக்­கான சுய நிர்­ணய உரி­மை­யினை பெற்­றுக்­கொள்ளும் எமது முயற்­சி­களில் இந்­தி­யா­வு­ட­னான நட்பு,மேலும் நேர்மை மற்றும்   இத­ய­சுத்­தி­யு­ட­னு­மான பரஸ்­பர அர­சியல் ராஜ­தந்­திர நட­வ­டிக்­கைகள் ஆகி­யன அவ­சி­ய­மா­ன­வை­யாகும். இதனை இந்­திய அடி­ப­ணிவு அர­சியல் என்று விமர்­சனம் செய்­வது பொருத்­த­மற்­றது. இந்­தியா எமக்கு முக்­கி­ய­மா­னது. இந்­தி­யாவின் பாது­காப்­பிலும் வளர்ச்­சி­யிலும் நாம் கரி­சனை கொண்­டுள்ளோம் என்று வடக்கு முதல்வர் சி.வி. விக்­கி­னேஸ்­வரன்  தெரி­வித்தார். 

வட மாகாண சபை கேட்போர் கூடத்தில் நேற்று நடை­பெற்ற  இந்­தியத் துணைத் தூதுவர் உயர்­திரு யு.நட­ரா­ஜ­னுக்­காக பிரிவு உப­சார வைப­வத்தில்   கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே  அவர்  மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். 

அவர்  அங்கு மேலும் உரை­யாற்­று­கையில் 

  எனது அர­சியற் போக்கு இந்­தி­யா­வுடன் நெருங்­கிய உற­வு­களைப் பேணக்­கூ­டிய விதத்தில் அமைந்­தி­ருப்­ப­தா­கவும் அதில் அர­சியல் ரீதி­யான உள்­ளர்த்­தங்கள் இருப்­ப­தா­கவும் கூறி வரு­கின்­றார்கள்.உதா­ர­ணத்­திற்கு வடக்கு கிழக்கு இணைந்த சுய­நிர்­ணய அடிப்­ப­டை­யி­லான தீர்வு ஒன்றை ஏற்­ப­டுத்­து­வதில் இந்­தி­யாவின் முக்­கி­யத்­துவம் பற்­றியும் இந்­தி­யா­வுக்கு இருக்­கின்ற தார்­மீகக் கடமை பற்­றியும் நான் வலி­யு­றுத்தி வரு­வதை நான் இந்­தி­யா­விடம் அடி­ப­ணிந்து விட்­ட­தாக சில பிர­சா­ரங்கள் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன. நாங்கள் எமது அண்­டை­நா­டான இந்­திய வல்­ல­ர­சுடன் நெருங்­கிய உற­வு­க­ளைப்­பேணி வரு­வது யதார்த்த பூர்­வ­மா­னது. 

அதற்கு உள்­ளர்த்­தங்கள் கற்­பிக்­கப்­ப­டு­வ­து­ந­கைப்­பிற்­கு­ரி­யது.எமக்கும் இந்­தி­யா­வுக்கும் இடை­யி­லான வர­லாற்று ரீதி­யான தொடர்­புகள், எமது பிரச்­சி­னையில் கடந்த நான்கு தசாப்­தங்­க­ளாக இந்­தியா ஏற்­ப­டுத்­தி­யுள்ள பல்­வேறு மட்­டங்­க­ளி­லான தலை­யீ­டுகள், மற்றும் இன்­றைய பூகோள அர­சி­யலில் இந்­தி­யா­வுக்கு இருக்­கின்ற முக்­கி­யத்­துவம் ஆகி­ய­வற்றின் அடிப்­ப­டையில் தமிழ் மக்­க­ளுக்­கான சுய நிர்­ணய உரி­மை­யினை பெற்­றுக்­கொள்ளும் எமது முயற்­சி­களில் இந்­தி­யா­வு­ட­னான நட்பு,மேலும் நேர்­மை­யு­டனும் இத­ய­சுத்­தி­யு­ட­னு­மான பரஸ்­பர அர­சியல் ராஜ­தந்­திர நட­வ­டிக்­கைகள் ஆகி­யன அவ­சி­ய­மா­னவை. இதனை இந்­திய அடி­ப­ணிவு அர­சியல் என்று விமர்­சனம் செய்­வது பொருத்­த­மற்­றது. இந்­தியா எமக்கு முக்­கி­ய­மா­னது. இந்­தி­யாவின் பாது­காப்­பிலும் வளர்ச்­சி­யிலும் நாம் கரி­சனை 

கொண்­டுள்ளோம். அதே­வேளை இலங்­கையில் இணைந்த வடக்கு கிழக்கில் தமிழ் மக்­களின் சுய நிர்­ணய உரிமை மற்றும் அவர்­களின் சமூக, பொரு­ளா­தார, அர­சியல் ரீதி­யான வளர்ச்சி ஆகி­யன இந்­தி­யா­வுக்கு எந்­த­ள­வுக்கு நன்­மை­யா­னதும் இன்­றி­யா­மை­யா­த­து­மா­னது என்ற உண்­மையின் அடிப்­ப­டை­யி­லா­னதே இந்­தியா தொடர்­பி­லான எனது கூற்­றுக்கள். 

யுத்தம் கார­ண­மாக பாரிய அழி­வினை சந்­தித்து தொடர்ந்தும் பல அடக்­கு­மு­றை­க­ளுக்­குள்ளும் இரா­ணுவ கெடு­பி­டி­க­ளுக்­குள்ளும் வாழ்ந்து வரும் எமது மக்கள் தமது வர­லாற்று ரீதி­யான அடை­யா­ளங்­களும் உரி­மை­களும் பாது­காக்­கப்­பட தக்க ஒரு தீர்­வினை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு இந்­தியா காத்­தி­ர­மா­னதும் துணிச்சல் மிக்­க­து­மான ஒரு வகி­பா­கத்தை மேற்­கொள்ளும் என்று  நம்­பி­யி­ருக்­கின்­றார்கள். எமது மக்­க­ளுக்கும் இந்­தி­யா­வுக்கும் இடை­யி­லான அர­சியல், பொரு­ளா­தார, பாது­காப்பு மற்றும் கலை கலா­சார ரீதி­யான உற­வுகள் ஒத்­து­ழைப்­புக்கள் ஆகி­யன எமது உறவை மேலும் வலுப்­ப­டுத்­து­வ­தற்கு அடித்­தளம் இடு­வன என்றும் அவர்கள் நம்­பு­கி­றார்கள். கசப்­பு­ணர்­வுகள், நம்­பிக்­கை­யீ­னங்கள் , சந்­தே­கப்­பார்வை ஆகி­ய­வற்றை புறம்­தள்­ளி­வைத்து எமது இலக்கை அடை­வ­தற்­காக இந்­தி­யா­வுடன் பரஸ்­பர நேர்மை, வெளிப்­ப­டைத்­தன்மை மற்றும் இத­ய­சுத்­தி­யுடன் நாம் செயற்­பட வேண்­டிய காலம் இது. 

அத்­துடன் எனது தனிப்­பட்ட அர­சியற் போக்கு குறித்து இந்­தி­யா­வுடன் சம்­பந்­தப்­ப­டுத்தி விமர்­சிக்­கின்­றமை ஹாஸ்யம் நிறைந்­தது. 

ஒன்றை எம் பத்­தி­ரி­கை­யா­ளர்கள் மனதில் வைத்­தி­ருக்க வேண்டும். புலி­க­ளுக்குப் பயந்து இந்­திய நாட்டைத் தஞ்சம் அடை­யவோ இந்­திய அர­சாங்­கத்­துடன் சேர்ந்து புலி­களை அழிக்­கவோ எனக்குத் தேவை­யி­ருக்­க­வில்லை. இந்­தி­யா­வு­ட­னான எனது உறவு ஆன்ம ரீதி­யா­னது. மகாத்­மா­காந்தி 1948ஆம் ஆண்டு ஜன­வரி மாதம் 30ந் திக­தி­யன்று சுட்டுக் கொல்­லப்­பட்­டதும் அன்­றைய சிறு வய­தி­லேயே குடும்­பத்­தி­லி­ருந்த மற்­ற­வர்­க­ளுடன் சேர்ந்து தேம்பி தேம்பி நாட்­க­ணக்­காக அழுது தீர்த்­த­வர்கள் நாம். ஆச்­சார்ய வினோ­பா­பாவே பூதான இயக்­கத்தைத் தொடங்­கிய போது அது வெற்றி பெற வேண்டும் என்று பிரார்த்­தித்­த­வர்கள் நாங்கள். ஜெயப்­பி­ரகாஷ் நாராயண்  அகிம்சை முறையில் சர்­வா­தி­கா­ரத்தை எதிர்த்த போது அவரின் மக்கள் இயக்­கத்தின் முன்­னேற்றம் பற்றிக் கரி­ச­னை­யாக இருந்­த­வர்கள் நாங்கள். இன்­றைய பத்­தி­ரி­கை­யா­ளர்­க­ளுக்கு ஜெயப்­பி­ரகாஷ் நாராயண் பற்றி எது­வுமே தெரி­யாது 

 அவர் அஹிம்சை முறையில் அர­சாங்­கத்தை எதிர் கொண்ட விதம் பற்றி எல்லாம் எமது ஊட­க­வி­ய­லா­ளர்கள் படித்­த­றிய வேண்டும். 

அத்­துடன் இலங்கை இந்­திய சங்கம் மாகாத்­மா­காந்தி பற்­றிய முதல் நினைவுப் பேரு­ரையை என்னை வைத்தே ஒழுங்­க­மைத்­தனர். பாரத நாட்டின் ஆத்ம பலத்தில் ஆன்­மீக பாரம்­ப­ரி­யத்தில் ஈடு­பா­டு­டை­யவன் என்றே என்னைத் தேர்ந்­தெ­டுத்­தி­ருந்­தார்கள் என்று நம்­பு­கின்றேன். அப்­போ­தைய இந்­திய ஸ்தானிகர்  கோபா­ல­கி­ருஷ்ண காந்தி எனது பேச்சை வெகு­வாக  ரசித்தார். அவ­ருடன் இருந்த ஒருவர் காந்தி பற்றி இலங்கைத் தமி­ழர்­க­ளா­கிய நீங்கள் அறிந்த அளவு இந்­தி­யர்கள் அறிந்து வைத்­தி­ருக்­கின்­றார்­களோ என்று தெரி­ய­வில்லை என்றார். எம் மக்கள் நல­னுக்­காக அன்றி இந்­தி­யா­விடம் எத­னையும் யாசிப்­ப­தற்கு எனக்குத் தேவைகள் இல்லை. காங்­கே­சன்­துறை பற்­றிய எமது கோரிக்­கையை இந்­தியா பெரு­ம­ன­துடன் ஏற்­றுள்­ளது. அதே போல் பலாலி விமான நிலையம் பற்­றிய எமது கோரிக்­கைக்கும் இலங்கை அர­சாங்­கமும் இந்­திய அரசும் செவி சாய்க்க வேண்டும் என்று எதிர் பார்க்­கின்றோம். எது எப்­ப­டியோ நாம் எமது அர­சியற் கொள்­கை­களில் வழு­வாது நின்று எமது மக்­க­ளுக்கு பெற்­றுக்­கொ­டுக்கக் கூடிய அனைத்து அனு­கூ­லங்­க­ளையும் பெற்­றுக்­கொ­டுப்­பதே எமது சிந்­த­னை­யாகும். அதனைப் பத்­தி­ரி­கைகள் கொச்­சைப்­ப­டுத்­தாது இருக்க வேண்டும் என்று அவற்­றிடம் அன்­புடன் கேட்டுக் கொள்­கின்றேன். 

அர­சியற் கட்­சிகள் பலவும் அடுத்த மாகா­ண­சபைத் தேர்­த­லுக்­கான முத்­தாய்ப்பு வேலை­களில் மும்­மு­ர­மாக ஈடு­ப­டத்­தொ­டங்கி விட்­டன. இந்த நிலையில் எமது ஒவ்­வொரு செயலும் கட்­சி­களால் உன்­னிப்­பாகக் கவ­னிக்­கப்­பட்டு வரு­கின்­றன. எமது நட­வ­டிக்­கைகள் சம்­பந்­த­மாக புதிது புதி­தாக உரைகள் எழு­தப்­பட்டு வரு­கின்­றன. தொடர் தேடல்­களே விடி­யல்­க­ளுக்கு வழி­வ­குக்கும் என்ற வகையில் இவர்­களின் முயற்­சிகள் புதிய புதிய தேடல்­க­ளாக மாறி எம்­மையும் வழிப்­ப­டுத்­தட்டும்! 

இந்­திய வெளி­வி­வ­கார அமைச்­சினால் வெளி­யி­டப்­பட்ட திரு நட­ரா­ஜனின் சேவைகள் பற்­றிய குறிப்பில் 32 வரு­டங்­க­ளிற்கும் மேலாக இவர் வெளி­வி­வ­கார அமைச்சில் பல்­வேறு பத­வி­களை வகித்து சீனா, இந்­தோ­னே­சியா, பிரான்ஸ், ஸ்பெயின், யேமன்,பூட்டான் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் சிறப்பாக சேவையாற்றியதுடன் வெளிநாடுகளுக்கான இராஜதந்திர பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்தியா பாகிஸ்தானுக்கிடையேயான பேச்சுவார்த்தை,பாரிஸ் நகரில் நடைபெற்ற பேச்சுவார்த்தை, 2007 டெல்லியில் நடைபெற்ற சார்க் மகாநாடு, 2010ல் திம்புவில் நடைபெற்ற சார்க் மாநாடு,இந்தோனேசியாவில் நடைபெற்ற நிலைத்து நிற்கக்கூடிய அபிவிருத்திகளும் கால நிலை மாற்றங்களும் தொடர்பான மாநாடு ஆகியவற்றில் கலந்துகொண்டு சிறப்பாகப் பணியாற்றியதாக அறியத் தந்துள்ளார்கள்.1984ற்கு முன்பதாக இந்தியாவின் சுகாதார மற்றும் குடும்ப நலன் அமைச்சில் பணியாற்றியுள்ளதுடன் 1982ல் டெல்லியில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டி நிகழ்ச்சிகளில் முக்கிய பதவிகளை வகித்தவர்  .நடராஜன்என்பது குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51