கடத்தல் குற்றத்தை தண்டனை சட்டத்தில் உள்ளடக்க வேண்டும் 

Published By: MD.Lucias

13 Feb, 2016 | 09:03 AM
image

கடத்­தப்­பட்­ட­வர்கள் தொடர்­பான குற்­றத்தை தண்­டனைச் சட்­டத்தில் கொண்டு வந்து அக் குற்­றத்­திற்கு தண்­டனை வழங்­கப்­பட வேண்டும் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தலை­வரும், அமைச்­ச­ரு­மான ரவூப் ஹக்கீம் நேற்று சபையில் தெரி­வித்தார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று வெள்ளிக்­கி­ழமை இடம்­பெற்ற வடக்கு, கிழக்கில் காணா­மல்­போ­னோருக்கு மரணச் சான்­றி­தழ்கள் வழங்­கு­வது தொடர்­பாக புத்­திக பத்­தி­ரண எம்.பி. முன்­வைத்த தனி­நபர் பிரே­ரணை மீதான விவா­தத்தில் உரை­யாற்­று­கை­யி­லயே அமைச்சர் ரவூப் ஹக்கீம் இவ்­வாறு குறிப்­பிட்டார்.

அமைச்சர் சபையில் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில்,

காணாமல் போன­வர்கள் என்ற விட­யத்தில் தமி­ழர்கள் அதி­க­ளவு பாதிக்­கப்­பட்­ட­தோடு, முஸ்­லிம்­களும் இதனால் பாதிப்­பு­களை சந்­தித்­தார்கள். காணாமல் போன­வர்­களில் சிங்­களச் சமூ­கமும் பாதிக்­கப்­பட்­டுள்­ளது. காணாமல் போன­வர்கள் என்ற சான்­றிதழ் வழங்கும் விட­யத்தில் ஐ.நா சட்­டங்கள் கடை­பி­டிக்­கப்­பட வேண்டும்.

எமது வடக்கு, கிழக்கு மாகாண உறுப்­பினர் ஒருவர் காணாமல் போனார். ஆனால் அவ­ருக்கு என்ன நடந்­தது என்று இன்றும் தெரி­யாது. இந் நிலையில் அவ­ரது தாயார் இன்­னமும் அவர் உயி­ரோடு இருக்­கின்றார் என்ற நம்­பிக்­கை­யு­ட­னேயே வாழ்ந்து வரு­கின்றார்.

எனவே பல­வந்­த­மாக கடத்தல் தொடர்­பான குற்­றத்தை எமது தண்­டனை மட்­டத்தில் கொண்டு வர­வேண்டும். அத்­தோடு பர­ண­கம ஆணைக்­குழு உட்பட பல ஆணைக்குழுக்களின் பரிந்துரைகளுக்கமைய கடத்தலை தண்டனைக்குறிய குற்றமாக்கி தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றார்.

Close

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37