இலங்கைக்கு எதிரான இரண்டாவது இருபது -20 போட்டியில் இந்திய அணி 69 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

ரஞ்சியில் இன்று இரவு இடம்பெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி இலங்கை முதலில் களத்தடுப்பை மேற்கொள்ள தீர்மானித்தது.

அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணியின் விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் சரியப்பட்ட போது ஓட்ட எண்ணிக்கையானது அதிரடியாக குவிக்கப்பட்டது. இருபது ஓவர்கள் நிறைவில் இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 191 ஓட்டங்களை பெற்றது. தவான் 51 ஓட்டங்களையும் ரோகித் சர்மா 43 ஓட்டங்களையும் அதிகூடதலாக பெற்றனர்.

இலங்கையின் பந்து வீச்சில் துஷ்மந்த சமிர இரு விக்கெட்டுகளையும் திசர பெரேரா மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றியதோடு ஹெட்ரிக் சாதனையும் புரிந்தார்.

 இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை இந்திய அணியின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 127 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியை தழுவியது.

இன்றைய போட்டியில் களம் கண்ட டில்சான் எவ்வித ஓட்டமும் பெறாது ஏமாற்றமளித்தார். கப்புகெதர 32, சந்திமால் 31 ஓட்டங்களை பெற்றனர்.

இந்திய அணியின் பந்து வீச்சில் அஸ்வின் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

போட்டியின் ஆட்டநாயகனாக தவான் தெரிவு செய்யப்பட்டார். மூன்று போட்டிகளை கொண்ட இத்தொடரில் இரு அணிகளும் ஒவ்வொரு வெற்றியை பெற்று சமநிலையில் உள்ளன.