"பிறப்பை முடிவு செய்வது விந்தணு அல்ல"

Published By: Robert

04 Mar, 2018 | 12:43 PM
image

உலகின் மிகப்­பெ­ரிய அதி­சயம் மனிதன் என்றால் மனி­தனை உரு­வாக்­கிய கரு­முட்­டையும் விந்­த­ணுவும் அதை­விட அதி­ச­ய­மா­னவை. அவை எவ்­வ­ளவு சிறி­யனவோ அவ்­வ­ளவு பெரிய இரக­சி­யத்தை உள்­ள­டக்கி வைத்­தி­ருக்­கின்­றன. கரு­விற்கு தேவை­யான மர­ப­ணுக்கள் தாயின் கரு­முட்­டை­யிலும் தந்­தையின் விந்­த­ணு­விலும் இருக்கும். விந்­தணு கரு­முட்­டையை அடை­வ­தற்குள் பெரிய போராட்­டமே நடந்­தி­ருக்கும்.

 கருப்­பையின் நுழைவுச் சுவர்­களில் இருக்கும் நாடாக்கள் போன்ற அமைப்பில் சிக்கி பாதி விந்­த­ணுக்கள் காணாமல் போக, பிளவுபட்ட வால் மற்றும் வாலே இல்­லாத விந்­தணு என பாதி விந்­த­ணுக்கள் தகுதி நீக்கம் செய்­யப்­பட, நீந்தத் திற­னற்ற விந்­த­ணுக்கள் பாதி­யி­லேயே விருப்ப ஓய்வு எடுத்து கொள்ள, மிச்சம் இருக்கும் சொற்ப அளவு விந்­த­ணுக்கள் தான் கரு­முட்டை இருக்கும் இடத்தின் அரு­கி­லேயே செல்லும். முதலில் கரு­முட்­டையை அடையும் விந்­தணு ஏற்­றுக்­கொள்­ளப்­பட்டு ஓர் இரசா­யன சமிக்ஞை வெளி­யி­டப்­படும். இதனால் கரு­முட்­டைக்குள் செல்ல முயற்சி செய்யும் மற்ற விந்­த­ணுக்­க­ளுக்கு மின் அதிர்வு போன்ற ஒரு விளைவு ஏற்­படும். ஆகையால் ஒன்­றுக்கும் மேற்­பட்ட விந்­த­ணுக்கள் கரு­முட்­டைக்குள் நுழை­வது தடுக்­கப்­படும். 

இப்­படி, பல தணிக்­கை­க­ளுக்கு பிறகு திரைக்கு வரும் மனிதம் என்னும் படத்தில் கதா­நா­ய­க­னாகக் கொண்­டா­டப்­ப­டு­வது விந்­த­ணுக்­கள்தான். கரு­முட்டை என்­பது விந்­த­ணுக்­காக காத்து நிற்கும் கதா­நா­யகி போலவே சித்­த­ரிக்­கப்­ப­டு­கி­றது.

ஆனால், ெஹாப்­கின்சன் (Hopkinson) பல்­க­லைக்­க­ழ­கத்தின் சமீ­பத்­திய ஆய்வு இந்தக் கதையை மாற்றி அமைத்­தி­ருக்­கி­றது. இந்த ஆய்வின் முடி­வு­படி கரு­முட்­டையை முதலில் அடையும் விந்­த­ணுவை தற்­போக்­குத்­த­ன­மாக (random selection) அது ஏற்றுக்கொள்­வ­தில்லை. தனக்குள் அனு­ம­திக்கும் முன் விந்­த­ணுவை பல­கட்ட ஆய்­வு­க­ளுக்கு உட்­ப­டுத்­து­கி­றது முட்டை. மர­பியல் ரீதி­யான குறை­பாடு இருக்கும் விந்­த­ணுவை நிரா­க­ரித்து தன்­னிடம் இருக்கும் குரோ­மோ­சோம்க்கு பொருத்­த­மான  இணையை உடைய விந்­த­ணுவை தனக்குள் அனு­ம­திக்­கி­றது. ஆகையால் படத்தின் இறு­தியில் முக்­கி­ய­மான முடிவு எடுக்கும் கதா­பாத்­தி­ர­மாக மாறு­கி­றது பெண்ணின் கரு­முட்டை. 

மனி­தர்­களைப் போலவே இயற்­கையின் மற்ற படைப்­பு­க­ளிலும் இனப்­பெ­ருக்க அறி­வியல் வியக்­கத்­தக்க அமைப்­பு­களை கொண்­டி­ருக்­கி­றது. சால்மன் (salmon) மற்றும்  டிரெளட் (trout)  மீன்கள் ஒரே இனத்தைச் சேர்ந்­தவை, ஆனால், வேறு­பட்ட வகைகள். சால்மன் முட்­டை­யுடன் டிரெளட் விந்­த­ணுவைக் கலந்­த­பொ­ழுது கருத்­த­ரிப்பு சாத்­தி­ய­மா­னது. ஆனால், சால்மன்  முட்­டை­யுடன் இரண்டு மீன்­களின் விந்­த­ணு­வையும் கலந்த போது தன்­னு­டைய இனத்தைச் சேர்ந்த விந்­த­ணுவை மட்­டும்தான் கருத்­த­ரிக்க அனு­ம­தித்­தது முட்டை. அசா­தா­ர­ண­மான சூழ்­நி­லை­களில்  ஓர் இனத்தைப் பாது­காக்க பரி­ணாம வளர்ச்­சியின் ஏற்­பா­டுதான் இது. தன் சொந்த இனத்தின் விந்­தணு இல்­லாத போது, இன்னோர் இனத்தின் விந்­தணு மூலம்  இனப்­பெ­ருக்கம் உறுதி செய்­யப்­ப­டு­கி­றது.

இன்னும் சில உயி­ரி­னங்­களில் ஆணின் விந்­த­ணுக்கள் இல்­லா­ம­லேயே கருத்­த­ரிப்பு சாத்­தி­ய­மா­கி­றது.

சில  பாலூட்­டி­களில் இனச்­சேர்க்­கைக்கு பிறகு விந்­தணு பெண்ணின் கருப்­பையில்  சேக­ரித்து வைக்­கப்­படும். அவை நேர­டி­யாக கருத்­த­ரிக்க அனு­ம­திக்கப்படு­வ­தில்லை. மற்றோர்  ஆண் விலங்­குடன் இனச்­சேர்க்கை நடந்த பிறகு அதன் விந்­த­ணு­வையும் ஏற்­க­னவே சேக­ரிக்­கப்­பட்ட விந்­த­ணு­வையும் ஒப்­பீடு செய்து அவற்றுள் சிறந்த விந்­த­ணு­வைதான் கருத்­த­ரிக்க அனு­ம­திக்­கி­றது (cryptic female selection) பெண் விலங்கு. இந்த ஆராய்ச்சிகள் மூலம் இனப்பெருக்கத்தில் பெண்ணின் கருமுட்டை (passive partner)குறைந்த அளவு பங்களிப்பை தான்  தருகிறது என்ற கருத்து மாற்றியமைக்கப்படுகிறது. 

இனி, விந்தணுக்களின் தீரத்தை போலவே கருமுட்டையின் காத்திருப்பும் போற்றுதலுக்குரியது. ஏனென்றால் முட்டைதான் இறுதி முடிவெடுக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஹண்டிங்டன்ஸ் நோய் பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2024-03-26 16:32:47
news-image

இடியோபதிக் பல்மனோரி ஃபைப்ரோசிஸ் எனும் நுரையீரல்...

2024-03-24 21:02:07
news-image

அர்த்ரால்ஜியா எனும் மூட்டு வலி பாதிப்பிற்குரிய...

2024-03-20 21:20:55
news-image

செபோர்ஹெக் கெரடோசிஸ் எனும் தோல் பாதிப்பிற்குரிய...

2024-03-20 09:17:28
news-image

குரல்வளை வீக்கம் : நவீன சிகிச்சை

2024-03-18 18:23:28
news-image

ஆர்டியோஸ்கிளிரோஸிஸ் ரெட்டினோபதி எனும் விழித்திரை பாதிப்பிற்குரிய...

2024-03-16 14:38:19
news-image

உள்காது பாதிப்புகளை கண்டறிவதற்கான நவீன பரிசோதனைகள்

2024-03-15 18:16:00
news-image

பெருங்குடல் வீக்கமும் நவீன சிகிச்சையும் 

2024-03-14 16:20:48
news-image

சிறுநீரக ஆரோக்கியம், அதன் பாதுகாப்பை உறுதிப்படுத்துவோம்!...

2024-03-14 15:59:51
news-image

ஆசனவாய் புற்றுநோய் பாதிப்பிற்கு நிவாரணமளிக்கும் சத்திர...

2024-03-13 22:50:05
news-image

மயோகார்டிடிஸ் எனும் இதய தசையில் ஏற்படும்...

2024-03-08 17:40:06
news-image

நான் ஆல்கஹாலிக் ஃபேட்டி லிவர் எனும்...

2024-03-07 13:48:04