நல்லாட்சியில் தொடர்ந்தும் புறக்­க­ணிக்­கப்­பட்டு வரும் மாகா­ண­மாக வடக்கு மாகாணம் காணப்­ப­டு­கின்­றது. அரச அலு­வ­ல­கங்­களில் நேர்­முகத் தேர்­வு­க­ளுக்கு தமி­ழர்கள் சென்று வந்­தாலும் அவர்­களை நிய­மிக்­காது தெற்கைச் சேர்ந்­த­வர்­கள் நிய­மிக்­கப்­ப­டு­கின்ற நிலை இன்றும் உள்­ள­தாக பாதிக்­கப்­பட்­ட­வர்கள் தெரி­விக்­கின்­றனர். 

 வட­மா­காண தென்னைப் பயிர்ச் செய்­கை அலுவலகத்துக்கு இந்த ஆண்டில் நிய­மிக்­கப்­பட்­ட­வர்­களில் அதி­க­மா­ன­வர்கள் வெளி மாவட்­டத் தைச் சேர்ந்த சிங்­கள மொழி பேசு­ப­வர்கள் என்று தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. 

வட­மா­காண தென்னைப் பயிர்ச் செய்கை அலு­வ­ல­கங்­க­ளுக்கு அலு­வ­லக உத­வி­யாளர், சாரதி, மேற்­பார்­வை­யாளர் போன்ற ஆள­ணி­க­ளுக்கு கொழும்பில் உள்ள தலை­மை­ய­கத்­தினால் கடந்த வருட இறு­தியில் நேர்­முகத் தெரி­வுகள் இடம்­பெற்ற போது வட­மா­க­ாணத்தைச் சேர்ந்­த­வர்­களும் அந்த நேர்­முகத் தேர்­வுக்கு தோற்­றி­யி­ருந்­தனர். இந்த நேர்­முகத் தெரிவின் மூலம் நிய­மிக்­கப்­பட்­ட­­வர்­களில் அதி­க­மா­ன­வர்கள் சிங்­கள மொழி பேசு­ப­வர்­களே. வவு­னியா மாவட்ட சபை அலு­வ­ல­கத்­துக்கு 4 பேரும், யாழ்ப்­பா­ணத்­துக்கு ஒரு­வரும் பளைப் பிர­தே­சத்­துக்கு 6 பேரும் நிய­மிக்­கப்­பட்­டுள்­ளனர். 

தமிழ் மொழி­பேசும் மக்கள் வாழும் வடக்கு மாகா­ணத்தில் அலு­வ­லக உத­வி­யா­ளர்களாகக்கூட  வட மாகா­ணத்தைச் சேர்ந்த எவரும் நிய­மிக்­கப்­ப­ட­வில்லை. 

வடக்கு மாகாணத்தில் இருந்து நேர்முகத் தேர்வுக்கு தோற்றியும் பயனில்லாத நிலையே இன்று உள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரி விக்கின்றனர்.