பிக்­குவும் இளைஞனும் கைது : காரணம் இதுதான்.!

Published By: Robert

04 Mar, 2018 | 11:13 AM
image

விகா­ரை­யொன்றை நிர்­மா­ணிப்­ப­தற்கு பணம் வசூல் செய்து வந்த போலி  புத்த பிக்குவையும்    இளைஞர் ஒரு­வ­ரையும்  மஹியங்­கனை பிர­தேச இளை­ஞர்­க­ளினால் பிடித்து,  மஹியங்­கனை பொலிஸ் நிலை­யத்தில் ஒப்­ப­டைத்­துள்­ளனர். இச்­சம்­பவம் கடந்த வெள்ளிக்கிழமை மாலை­ ம­ஹி­யங்­க­னையில் இடம்­பெற்­றுள்­ளது. பணம் வசூல் செய்த புத்­த­பிக்கு மீது மஹியங்­கனை பிர­தேச இளை­ஞர்­க­ளுக்கு சந்­தேகம் ஏற்­ப­டவே அவர்கள்  குறித்த  பிக்­கு­வையும் அவ­ருடன் உத­விக்கு வந்த  இளை­ஞ­ரையும் விசா­ரணை செய்­துள்­ளனர். இச்­சந்­தர்ப்­பத்தில் புத்த பிக்­கு­வைப் ­போன்று குறித்த நபர்  வேட­மிட்டு வந்­துள்ளார் என்­ப­தையும்  மற்­றை­யவர் அவ­ருக்கு உத­வி­யாளர் போன்று வந்து மக்­களை ஏமாற்றி பணம் சேக­ரிப்­பவர் என்றும் தெரிய வரவே  இரு­வ­ரையும் பிர­தேச இளை­ஞர்கள் நையப்­பு­டைத்­துள்­ளனர். பின்பு மஹியங்­கனை பொலி­ஸா­ரிடம் இது குறித்து முறைப்­பாடு செய்­யவே அவர்கள் இரு­வ­ரையும் கைது செய்து விசா­ரித்­ததில் இரு­வ­ருமே பணம் பறிக்க செய்த நாடகம் என தெரிய­வந்­துள்­ளது. 

மேலும் இவ்­வி­ரு­வரும் பய­ணித்த ஆட்டோ  நிதி வசூல் செய்­வ­தற்கு தயா­ரிக்­கப்­பட்ட போலி ரசீ­துப்­ புத்­த­கங்கள் 25யும்  வசூல் செய்­யப்­பட்­டி­ருந்த 5880 ரூபா பணம்  மற்றும் காவி உடைகள் சில­வற்­றையும் மஹியங்­கனைப் பொலிஸார் மீட்­டுள்­ளனர்.  இவ்­வி­ருவர் மீதான  விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­வ­தா­கவும் அதன் பின்னர் மஹியங்­கனை நீதவான்  நீதி­மன்­றத்தில் ஆஜர்படுத்­தப்­ப­டுவர் என மஹியங்கனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ருவன் அமரக்கோன் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08