கொழும்பு மா நகர எல்லை மற்றும் அதனைச் சூழ­வுள்ள பகு­தி­களில் இது­வரை பல வீதி­யோ­ரங்­களில்  அகற்­றப்­ப­டாமல் குவிந்­தி­ருக்கும்  குப்பை கூளங்­களை, இன்னும் 24 மணித்­தி­யா­லங்­க­ளுக்குள், அவ்­வி­டங்­க­ளி­லி­ருந்து அகற்­று­மாறு, மாகாண சபைகள் மற்றும் உள்­ளூ­ராட்சி அமைச்சர் பைஸர் முஸ்­தபா கொழும்பு மா நகர சபை ஊழி­யர்­க­ளுக்கு பணிப்­புரை விடுத்­துள்ளார்.    அத்­துடன், பொது இடங்­களில் குப்பை மற்றும் கழி­வு­களைக் கொட்டும் பொது­மக்­களைக் கைது செய்­யு­மாறும் அமைச்சர் பொலி­ஸா­ருக்கு உத்­த­ரவு பிறப்­பித்­துள்ளார். 

Image result for கொழும்பு குப்­பை­

   மாகாண சபைகள் மற்றும் உள்­ளூ­ராட்சி அமைச்சில், நேற்று இது தொடர்பில் இடம்­பெற்ற கலந்­து­ரை­யா­ட­லின்­போதே, அமைச்சர் இவ்­வாறு அதி­கா­ரிகள் மற்றும் பொலி­ஸா­ருக்கு  பணிப்­புரை விடுத்தார். 

இக்­க­லந்­து­ரை­யா­டலில், மா நகர சபை அதி­கா­ரிகள், ஊழி­யர்கள், சுகா­தா­ரத்­துறை அதி­கா­ரிகள்  மற்றும் பொலிஸ்  அதி­கா­ரிகள் எனப்­ப­லரும் கலந்து கொண்­டி­ருந்­தனர். 

   வீதி ஓரங்­களில் இன்னும் அகற்­றப்­ப­டாமல் உள்ள குப்­பை­கூ­ளங்­களை உட­ன­டி­யாக அகற்றிக் கொள்­ளு­மாறும், இதற்கு நேற்றுக் காலை தொடக்கம் 24 மணி நேர கால அவ­காசம் வழங்­கப்­பட்­டுள்­ள­தா­கவும், மா நகர அதி­கா­ரிகள் மா நகர ஊழி­யர்­களின் ஒத்­து­ழைப்­போடு இது தொடர்பில் கவ­ன­மெ­டுத்து விரைந்து செயற்­ப­டு­மாறும், அமைச்சர் இதன்­போது கேட்­டுக்­கொண்டார். அத்­துடன், இது தொடர்பில் உரிய நட­வ­டிக்­கை­களை எடுக்கத் தவறும் அரச மற்றும் தனியார் நிறு­வனப் பணிப்­பா­ளர்கள்,  அதி­கா­ரி­க­ளுக்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­ளு­மாறும் அமைச்சர் உரிய அதி­கா­ரி­க­ளுக்கு ஆலோ­சனை வழங்­கி­யுள்ளார்.