அட்­டப்­பள்ளம்  இந்து மயான  ஆக்­கி­ர­மிப்பால் அம்­பாறை  மாவட்ட ஒட்­டு­மொத்த தமிழ் மக்­களும் கொந்­த­ளித்­துள்­ளனர். இச்­செ­யற்­பாடு இனங்­க­ளுக்­கி­டை­யி­லான நல்­லி­ணக்­கத்தில் பாதிப்பை ஏற்­ப­டுத்தும் என அம்­பாறை மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் கவீந்­திரன் கோடீஸ்­வரன் தெரி­வித்தார்.

அம்­பாறை நிந்­தவூர் பிர­தேச செய­ல­கத்­துக்­குட்­பட்ட அட்­டப்­பள்ளம் தமிழ் மக்­களின் மயான பூமி அப­க­ரிப்பு முறுகல் நிலையைத் தொடர்ந்து கைது செய்­யப்­பட்டு சிறையில் அடைக்­கப்­பட்­டுள்ள 23 தமிழ் இளை­ஞர்­களின் நிலை தொடர்பில் கருத்து தெரி­விக்­கும்­போதே அவர் இவ்­வாறு குறிப்­பிட்டார்.

 அவர் மேலும் தெரி­விக்­கையில். அட்­டப்­பள்ளம் கிராமம்  முற்­றிலும் தமி­ழர்கள் வாழ்ந்த பழம்­பெரும் பிர­தேசம்.  இவ்­வாறு பரம்­ப­ரை­யாக இந்தப் பிர­தே­சத்தில் வாழ்ந்த பல தமிழ் மக்கள் கடந்த காலத்தில் இடம்­பெற்ற வன்­செயல் நட­வ­டிக்­கையின் கார­ண­மாக கிரா­மத்தை விட்டு வெளி­யேற்­றப்­பட்­டனர். 

ஆயினும் பல குடும்­பங்கள் கிரா­மத்தை விட்டு வெளி­யே­றாது இன்று வரை வாழ்ந்து வரு­கின்­றனர் அதேபோல் கிரா­மத்தின் கடற்­க­ரையை அண்­டி­ய­தான பிர­தே­சத்தில் அமைந்­துள்ள காணியை சோழர் காலம் தொடக்கம் மயா­ன­மா­க பயன்­ப­டுத்தி வரு­கின்­றனர்.

இந்­நி­லையில் மயா­னத்தைக் கூட விட்டு வைக்­க­மு­டி­யாது  மனி­தா­பி­மான மற்ற ரீதியில் மயா­னத்­தையும்  தனது பூமி எனக் கூறி அதனைப் பெறு­வ­தற்கு கடந்த பல வரு­ட­களாக ஒருவர் முயற்­சிக்­கின்றார். பிரே­தங்கள் புதைக்­கப்­பட்ட புதை குழி­க­ளுக்கு மேலாக வேலியைப் போட்டு மனச்­சாட்சி அற்ற செயற்­பாட்­டையும் மேற்­கொண்­டுள்ளார்.

மக்­களின் பல எதிர்ப்­புக்கு மத்­தியில் அவ­ரது முயற்சி நிறை­வு­றாத நிலையில் சம­ர­சப்­பேச்சு வார்த்தை என  மக்­களை  அழைத்த நிந்­தவூர் உத­விப்­பி­ர­தேச செய­லாளர் மற்றும் கிராம உத்­தி­யோ­கத்தர்,  உள்­ளிட்­ட­வர்கள்  அட்­டப்­பள்­ளத்­துக்கு சென்று ஆலய தலைவர் உள்­ளிட்ட மக்­களை அழைத்து பேசி­யுள்­ளனர்.

நீதி­மன்­றத்தின் உத்­தி­யோ­கத்­தர்கள் எவரும் சம்­பந்­தப்­பட்ட இடத்­திற்கு வரு­கை­த­ராத நிலையில் காணி தொடர்­பி­லான பிணக்கைத் தீர்க்க அதி­கா­ர­மில்­லாத உத­விப்­பி­ர­தேச செய­லாளர் அழைத்த போது தமது மயா­னத்தை விட்­டுக்­கொ­டுக்க முடி­யாது எனக் கூறிய மக்கள் எதிர்ப்­பினை வெளி­யிட்ட நிலை­யி­லேயே வாய்த்­தர்க்கம் ஏற்­பட்­டுள்­ளது. இந்  நிலையில் குறித்த 23 அப்­பாவித் தமிழ் மக்­களும் கைது செய்­யப்­பட்டு சிறையில் அடைக்­கப்­பட்­டுள்­ளனர்.எனவே அவர்கள்   உடன்  விடு­தலை  செய்­யப்­பட வேண்டும். 

 ஆகவே ஜனா­தி­பதி ,பிர­தமர் நல்­லி­ணக்க அமைச்சு உள்­ளிட்­ட­வர்கள் இவ்­வி­டயம் தொடர்பில் தலை­யீடு செய்து கைது செய்­யப்­பட்­ட­வர்­களை உடன் விடுதலை செய்வதுடன் ,தமிழ் மக்களுக்கான நியாயமான தீர்வினைப் பெற்றுக் கொடுக்க வேண்டும். 

இல்லையேல் அம்பாறை மாவட்டம் மட்டுமல்லாது இலங்கையில் வாழும் அனைத்து தமிழ் மக்களும் ஒன்றிணைந்து போராட வேண்டிய நிலை உருவாகலாம் எனவும் குறிப்பிட்டார்.