நீர்கொழும்பு பகுதியில் கேரளா கஞ்சாவுடன் நபர் ஒருவரை விசேட பொலிஸ் அதிரடிப்படையினர் கைதுசெய்துள்ளதாக தெரிவித்தனர்.

குறித்த நபரிடமிருந்து ரூபா 6 கோடிக்கும் அதிகமான 403 கிலோ கிராம் கேரள கஞ்சாவை விசேட பொலிஸ் அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

நீர்கொழும்பில் விசேட பொலிஸ் அதிரடி படையினரின்  சுற்றிவளைப்பின் போது குறித்த கேரள கஞ்சா தொகை கைப்பற்றப்பட்டுள்ள நிலையில் கைதுசெய்யப்பட்டவரிடம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.