பதுளையிலிருலிருந்து கண்டி நோக்கி சென்ற பொதிகள் ஏற்றிச்சென்ற ரயிலில் தற்கொலை செய்ய முயற்சித்த இளைஞன் பாடுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சென்கிளோயர் ரயில் கடவைப்பகுதியிலே நேற்று இரவு 7.30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தனது காதலியுடன் ஏற்பட்ட முரண்பாட்டினால் நானுஓயா பிளெக்பூல் பிரதேசத்தினை சேர்ந்த 30 வயதுடைய இளைஞரே இவ்வாறு படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்தில் படுகயாமடைந்த இளைஞர் ரயில்வே பாதுகாப்பு பிரிவினால் கொடகலை ரயில்வே நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட பின்னர் கொடகல பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பின்னர் நுவரெலிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தனது காதலிடன் ஏற்பட்ட முரண்பாட்டையடுத்தே தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் சந்தேகிப்பதுடன் குறித்த இளைஞனால் செலுத்தி வந்த வேன் சென்கிளேயர் பகுதியில் இருந்து மீட்டுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.