சுதந்திரக் கிண்ண முக்கோணத் தொடரில் பங்கேற்று விளையாடுவதற்காக பங்களாதேஷ் மற்றும் இந்திய அணிகள் நாளை இலங்கை வருவதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.

இலங்கையின் 70 ஆவது சுதந்திரதினத்தை முன்னிட்டு இலங்கை, இந்தியா மற்றும் பங்ளாதேஷ் ஆகிய மூன்று அணிகள் பங்கேற்று விளையாடவுள்ள முக்கோணத்தொடர் எதிர்வரும் 6 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

இந்நிலையில், குறித்த முக்கோணத் தொடரில் பங்கேற்று விளையாடவுள்ள இந்திய மற்றும் பங்களாதேஷ் அணிகள் நாளை இலங்கை வருகின்றன.

நாளை மாலை 4.50 மணியளவில் பங்களாதேஷ் அணியும் நாளை இரவு 8.30 மணியளவில் இந்திய அணியும் வருகைதரவுள்ளன.