மழையொன்றின் ஸ்பரிசத்திற்கு உதவுகின்றோம் : வைத்தியர் கீதா ஹரிப்பிரியா

Published By: Priyatharshan

03 Mar, 2018 | 10:38 AM
image

இலங்கை சுகாதாரத்துறையின் தரத்தை சர்வதேச மட்டத்திற்கு கொண்டு செல்லும் வகையில் அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது. 

அந்த வகையில் தேசிய சுகாதார நல கண்காட்சியொன்று பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. இதன்போது இலங்கை மற்றும் இந்திய வைத்தியர்கள் பலர் கலந்து கொண்டனர். 

அதேபோன்று அதிநவீன மற்றும் உலகத்தரத்திலான மகப்பேற்று மருத்துவ சேவையாற்றி வரும் மகபேற்றுப் மருத்துவர் கீதா ஹரிப்பிரியாவுடன் கலந்துரையாட சந்தர்ப்பம் கிட்டியது. அதன் பகிரல்களில் சில கேசரி வாசகர்களுக்காக கீழே தரப்படுகின்றன. 

கேள்வி : தென்னிந்தியாவிலே சிறந்த மகப்பேற்று மருத்துவர் என மதிப்பிடப்பட்டுள்ளீர்கள், பல தம்பதிகளுக்கு குழந்தை வரத்தை பெற்றுக் கொடுத்துள்ளீர்கள், இந்நிலையில் உங்களது இலங்கை வருகையின் நோக்கம் என்ன-----?

பதில் : கடவுள் கொடுத்த வரத்தினை சில தவறுகளால் தவறவிட்டு மனவேதனையோடு காணப்படுகின்ற எமது மக்களுக்கும் மற்றும் எல்லாவித சிகிச்சைகளையும் பெற்றுக்கொண்டு இறுதி வரையில் குழந்தையின் அன்பை பெறாமலே சென்றுவிடுவோமா  என வேதனையில் வாடும் தம்பதிகளுக்கும் குழந்தையின் ஸ்பரிசத்தை உணர்வதற்கு ஓர் உதவியையே நாம் செய்துவருகின்றோம். அந்தவகையில் எமது மருத்துவ சிகிச்சைகள் மற்றும் ஆலோசனைகளை உலகம் பூராகவும் குறிப்பாக எமது தமிழ் பேசும் மக்கள் பெற்றுக் கொள்கிறார்கள். இதன்படி இலங்கையிலும் எமது இலவச ஆலோசனைகளை, சுகாதார நலன்களை விஸ்தரிக்க நாம் எடுத்துக்கொண்டுள்ள முயற்சியாக இது உள்ளது.

மேலும் இலங்கை வாழ் மக்கள் பல்வேறு சிகிச்சைகளை பெற்றுக்கொண்டும் இதுவரையில் குழந்தையின்மையால் வேதனையில் உள்ளனர். இவ்வாறானவர்கள் எம்மை நாடும் போது அவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சைகளில் பலன் கிடைக்கும். இதன் மூலம் தேசிய மட்டத்தில் பல்லாயிரக்கணக்கான தம்பதிகளுக்கு குழந்தைபேறு கிடைக்க வழி செய்துள்ளோம். 

இதுவரையில் எமது அவதானிப்பில் இலங்கையர்கள் பலமுறை கருச்சிதைவு ஏற்பட்டவர்கள், வேறு சிகிச்சைகளில் பலனடையாதவர்கள், வயது முதிர்ந்தவர்கள் என அனைவரும் எம்மை தேடிவரக் காரணம் எமது வைத்தியசாலையால் வழங்கப்படும் அதிநவீன மற்றும் உலகத்தரத்திலான சிகிச்சைகளேயாகும். எனவே இந்த சிகிச்சைகளை இலங்கையரும் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்திலேயே நாம் செயற்பட்டு வருகிறோம்.

கேள்வி : அதிநவீன மற்றும் உயர்தரத்திலான சிகிச்சை முறைகள் என்கிறீர்கள். அவ்வாறு எதனை குறிப்பிடுகிறீர்கள். அவ்வாறு மருத்துவ வளர்ச்சி இலங்கையில் காணப்படவில்லையா? இல்லையாயின் நீங்கள் குறிப்பிடும் வித்தியாசங்கள் என்ன? 

பதில் : இலங்கையிலும் சிறந்த மருத்துவ முறைகள் காணப்படுகின்றன. இருப்பினும் எங்களிடம் உள்ள சர்வதேச செயன்முறை கருத்தரிப்பு சிகிச்சை  முறைமையினால் வெற்றிகள் பல பதிவாகியுள்ளன. அவற்றுடன் எங்களுடைய புதிய தொழில்நுட்பத்தில் சரியான தட்பவெப்பத்தை கொடுத்து பாதுகாக்கும் நிலை ஏற்படுத்துகின்றது. இந்த தொழில்நுட்ப மேம்பாடு கருவுறுதல் விகிதத்தையும் கர்ப்ப விகிதத்தையும் அதிகரிக்கும். 

கேள்வி : நீங்கள் வெற்றியடைய காரணமான சிகிச்சை முறையென்ன? 

பதில் : மகப்பேறு இல்லாத தம்பதியருக்கு இன்பரா சைட்டோ பிளாஸ்மிக் மார்பாலஜிக்கல் செலக்டட் ஸ்பெர்ம் (இம்சி) ஒரு வரப்பிரசாதமாகும். இது கணனியின் உதவியுடன் செய்யக் கூடியவொன்று. இதன்மூலம் கர்ப்ப விகிதத்தை கூட்டவும் குறைபிரசவத்தை தவிர்க்கவும் மிகச் சிறந்த விந்துவை  எக்ஸ் கதிர் மூலம் ஆறாயிரம் முறை ெபரிதுப்படுத்தி தேர்வு செய்ய உதவுகிறது. இதன் மூலம் துல்லியமான முறைமை கண்டறியப்படுகின்றது. இந்த தொழில்நுட்பம் அப்பழுக்கற்றதாகவும் பாதுகாப்பானதாகவும் அதேநேரத்தில் மிகச் சிறந்த கருமுட்டை உருவாக்கத்திற்கும் உயர்ந்த கர்ப்ப விகிதத்திற்கும் மிகக் குறைந்த குறை பிரசவங்களுக்கும் உதவுவதாக உள்ளது. இந்த திட்டமானது ஐ.வி.எப். முறைகளில் வெற்றிக் காணாதவர்க்கும் தொடர் குறை பிரசவங்களுக்கும் மிக சிறந்த தீர்வாக அமையும்.  அதிநவீன திறன் கொண்ட மைக்ராஸ்கோப்பால் ஆரோக்கியமான விந்துவை கண்டறியும் முறையும் எம்மால் வழங்கப்படும் சிகிச்சையாகும். இவைகளும் வெற்றிக்கான சில முக்கிய சிகிச்சை முறைகளாகும். 

அவற்றுடன் மகப்பேறின்மைக்கான சிகிச்சையில் புதிய தொழில்நுட்பங்களில் பெண்களுக்கு PCOD - புதிய மருத்துவ சிகிச்சைகள் எண்டோமெட்ரியோசிஸ் - நாரிழைகள் - குழாய் அடைப்பு (ஹைஸ்டொஸ்கோப்பி / 3D லாப்ராஸ்கோப்பி) , எம்பிரியாஸ்கோப் - மிகச் சிறந்த கருமுட்டை தேர்வு, எம்பிரியோக்ளூ - கருமுட்டை பதியத்தை ஊக்கப்படுத்தவதற்கும், கர்ப்ப விகிதாசாரத்தில் முன்னேற்றத்தைக் காணவும் மிக அண்மைத்திய மாற்று முறை, சைட்டோபிளாஸ்மிக் டிரான்ஸ்பர் - கருமுட்டைகளின் சாதாரண திறன் இழந்துள்ள வயதான பெண்களுக்கான மிக உதவிக்கரமான நவீன மாற்றுமுறை, பிஆர்பி (Platlet rich plasma) - குறைபாட்டுடன் கூடிய கருப்பைச் சுவர்களுடைய பெண்களுக்கு மிக உதவிக்கரமாக இருக்கும் பிஆர்பி முறையிலான புதிய செயல்பாடு, பிஜிஎஸ் (Pre genetic screening) - கரு முட்டையின் முழு மரபணு தொடர்புடைய விபரங்கள் சேகரித்து மரபணு பிரச்சினைகளை தவிர்த்தல் ஆகியனவாகும்.

கேள்வி : உங்கள் சாதனைகளுக்கு கிடைத்த அங்கீகாரங்களை பற்றி கூறுங்கள்?

பதில் : சர்வதேச தரத்திலான மகப்பேற்று சிகிச்சைகளை தருவதன் அடிப்படையில் இந்தியாவில் டைம் ஆப் இந்தியா நடத்திய ஆய்வில் சென்னையில் முதல் இடத்தையும் இந்திய அளவில் நான்காவது இடத்தையும் பெற்றுள்ளோம். இன்டரநெனல் அக்ரிடியேஷன் என்ற தகுதியும் எங்கள் மருத்துவமனைக்கு கிடைத்துள்ளது. சிறந்த சிகிச்சையாளர்களுக்கான ஐரோப்பிய விருதையும் பெற்றுள்ளோம். 

இதன் அடிப்படையில் எமது நோக்கம் இலங்கை மக்களுக்கு இன,மத வேறுபாடு இன்றி அனைவருக்கும் சர்வதேச தரத்திலான சிறந்த சிகிச்சைகள் கிடைக்க வேண்டும் என்பதே எமது நோக்கம். இதற்காக இலங்கை சுகாதார அமைச்சின் சட்டதிட்டங்களுக்குட்பட்டு எம்மால் முடிந்த சேவைகளை செய்து வருகின்றோம். 

( இரோஷா வடிவேலு )

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

குரல்வளை வீக்கம் : நவீன சிகிச்சை

2024-03-18 18:23:28
news-image

ஆர்டியோஸ்கிளிரோஸிஸ் ரெட்டினோபதி எனும் விழித்திரை பாதிப்பிற்குரிய...

2024-03-16 14:38:19
news-image

உள்காது பாதிப்புகளை கண்டறிவதற்கான நவீன பரிசோதனைகள்

2024-03-15 18:16:00
news-image

பெருங்குடல் வீக்கமும் நவீன சிகிச்சையும் 

2024-03-14 16:20:48
news-image

சிறுநீரக ஆரோக்கியம், அதன் பாதுகாப்பை உறுதிப்படுத்துவோம்!...

2024-03-14 15:59:51
news-image

ஆசனவாய் புற்றுநோய் பாதிப்பிற்கு நிவாரணமளிக்கும் சத்திர...

2024-03-13 22:50:05
news-image

மயோகார்டிடிஸ் எனும் இதய தசையில் ஏற்படும்...

2024-03-08 17:40:06
news-image

நான் ஆல்கஹாலிக் ஃபேட்டி லிவர் எனும்...

2024-03-07 13:48:04
news-image

நியூரோஎண்டோகிரைன் கட்டி பாதிப்புக்கு நிவாரணமளிக்கும் நவீன...

2024-03-06 22:01:57
news-image

பிரட்ரிச்சின் அட்டாக்ஸியா எனும் நரம்புகளில் ஏற்படும்...

2024-03-05 22:01:18
news-image

ஒஸ்டியோமைலிடிஸ் எனும் எலும்பு பாதிப்பிற்குரிய நவீன...

2024-03-04 19:55:10
news-image

இதய திசுக்களில் ஏற்படும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-03-02 19:24:52