SLAHAB தேசிய விருதுகள் விழா 2016  : பங்காளராக இணையும் ‘Dermacolor’ மற்றும் ‘Basicare’

Published By: Priyatharshan

12 Feb, 2016 | 04:20 PM
image

‘Dermacolor’ மற்றும் ‘Basicare’ ஆகியன இலங்கை சிகையலங்காரம் மற்றும் அழகுகலை நிபுணர்கள் சங்கத்தின் (SLAHAB) 19ஆவது வருடாந்த தேசிய விருதுகள் வழங்கும் நிகழ்வில் இணை பங்காளராக இணைந்து கொள்ளவுள்ளன.

இலங்கையின் சுகாதாரம் மற்றும் அழகுகலை பராமரிப்பு துறையில் முன்னோடியான My Chemist குழுமத்தின் விசேட சருமம் மற்றும் அழகு பராமரிப்பு வர்த்தகநாமங்களான ‘Dermacolor’ மற்றும் ‘Basicare’ ஆகியன பெப்ரவரி மாதம் 28ஆம் திகதி காலை 9 மணிக்கு கலதாரி ஹோட்டலில் இடம்பெறவுள்ள இலங்கை சிகையலங்காரம் மற்றும் அழகுகலை நிபுணர்கள் சங்கத்தின் (SLAHAB) 19ஆவது வருடாந்த தேசிய விருதுகள் வழங்கும் நிகழ்வில் இணை பங்காளராக இணைந்து கொள்ளவுள்ளன.

சிகை மற்றும் அழகுகலை நிபுணர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான மிகப்பெரிய தேசிய போட்டிகளுள் ஒன்றான இந் நிகழ்வு சர்வதேச மட்டத்தில் தொழிற்துறை மற்றும் தரங்களை மேம்படுத்தும் நிகழ்வாக அமைந்துள்ளது. 

இந்த வருடம்  நாடுமுழுவதுமிருந்து 100 இற்கும் மேற்பட்ட சிகை மற்றும் அழகுகலை நிபுணர்கள் சர்வதேச தரம் கொண்ட குழுக்கள் முன்னிலையில் தமது திறமைகளை வெளிப்படுத்தவுள்ளனர். 

பதிவு செய்யப்படும் போட்டியாளர்களுக்கு இத்துறையைச் சேர்ந்த புகழ்பெற்ற சிகை மற்றும் அழகுகலை நிபுணர்களினால் இலவசமாக பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன. இதன் காரணமாக போட்டியாளர்கள் தமது முழுமையான திறனையும் விருத்தி செய்து கொள்வதற்கான அரிய வாய்ப்பினை பெறவுள்ளனர். 

சர்வதேச கட்டுப்பாடுகளுக்குட்பட்ட, இந்த போட்டியில் பெண்கள் பேஷன் தின சிகையலங்காரம், ஆண்கள் Progressive Cut மற்றும் Style,  இரவு நேரத்திற்கேற்ற பெண்கள் சிகையலங்காரம், பெண்களுக்கான ஃபேண்டஸி நக அலங்காரம், தனிநபர் பெண்கள் மணமகள் சிகையலங்காரம் மற்றும் தனிநபர் பெண்கள் மணமகள் முக ஒப்பனை என 13 பிரிவுகள் உள்ளடக்கப்பட்டுள்ளன. 

இந் நிகழ்வின் விருதுகள் வழங்கும் வைபவம் அதே தினத்தன்று மாலை 6 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. 

“இந்த நிகழ்வின் இணை பங்காளராகவும், உள்நாட்டு சிகை மற்றும் அழகு பராமரிப்பு துறையில் உள்ளவர்களுக்கு பயிற்சி மற்றும் கல்வி வழங்கி ஊக்குவித்து வரும் இச்சங்கத்தின் முயற்சிகளுடன் My Chemist குழுமம் இணைந்துள்ளமை குறித்து நாம் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். 

உள்நாட்டு சிகை மற்றும் அழகுகலை நிபுணர்கள் தங்கள் படைப்பாற்றல்களை வெளிப்படுத்தக்கூடிய மகத்தான வாய்ப்பாக இதுவுள்ளதுடன், அவர்கள் சர்வதேச மட்டத்தில் போட்டியிடுவதற்கான மைல்கல்லாகவும் உள்ளது” என SLAHAB  இன் ஸ்தாபகரும், தலைவருமான நயனா கருணாரத்ன தெரிவித்தார்.

 

வர்ணமயமான இந்த வருட நிகழ்வில் வர்த்தக கூடங்கள் இடம்பெறவுள்ளதுடன், சிகை மற்றும் அழகு பராமரிப்புத் துறையின் முன்னணி வர்த்தகநாமங்கள் மூலம் நாள்முழுவதும் விளக்கமளிப்புகள் வழங்கப்படவுள்ளன. 

இந் நிகழ்வின் இணை பங்காளரான ஆல My Chemist குழுமம் சிகையலங்கார ‘Dermacolor’ முக ஒப்பனை உற்பத்திகள் மற்றும் ‘Basicare’ அழகு பராமரிப்பு உபகரணங்களின் பயன்பாடு குறித்து விளக்கங்களை வழங்கவுள்ளது. 

‘SLAHAB தேசிய விருதுகள் 2016 இற்கு இணை அனுசரணை வழங்கி இலங்கையின் அழகு மற்றும் சிகை பராமரிப்பு துறையின் வளர்ச்சிக்கு பங்களிப்பு வழங்குவதையிட்டு My Chemist குழுமம் மகிழ்ச்சியடைகிறது. 

My Chemist குழுமத்தின் இரு முன்னணி வர்த்தகநாமங்களான ‘Dermacolor’ மற்றும் ‘Basicare’ ஆகியன எந்தவொரு பேஷன் விரும்பிகளுக்கும் பொருத்தமான புதுப்பாணியான மற்றும் நவநாகரீகமான தோற்றத்தை வழங்கக்கூடிய விசேட சரும மற்றும் அழகு பராமரிப்பு உற்பத்திகளை வழங்கி வருகிறது” என My Chemist International இன் பணிப்பாளர் சரத் ஜயசேகர தெரிவித்தார்.

மேலும் இந் நிகழ்வில் SLAHAB இனால் ‘Pride & Glory’ எனும் புதிய சஞ்சிகை அங்குராப்பணம் செய்து வைக்கப்படவுள்ளது. 

இந்த காலாண்டு சஞ்சிகையில் இலங்கையை சேர்ந்த புகழ்பெற்ற அழகுகலை நிபுணர்கள் மற்றும் மருத்துவர்களின் சுகாதாரம் மற்றும் அழகு பராமரிப்பு தொடர்பான கட்டுரைகள் இடம்பெறவுள்ளன. 

மேலும் SLAHAB ஆனது தேசத்தின் சிகை மற்றும் அழகுகலை நிபுணர்களின் செயற்பாடுகளை வெளிப்படுத்தும் வகையில், அதன் 20 வருட பூர்த்தியை எதிர்வரும் 2017ஆம் ஆண்டில் கொண்டாட திட்டமிட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

Yamaha மோட்டார் சைக்கிள்கள், ஸ்கூட்டர்களுக்காக பிரத்தியேகமாக...

2024-03-28 10:39:07
news-image

Samsung Sri Lanka ஆனது 35%...

2024-03-27 10:43:06
news-image

பருக்களுக்கு விடைகொடுத்திடும் : பியுரிஃபைங் நீம்...

2024-03-27 10:19:07
news-image

கார்கில்ஸ் நிறுவனமானது பிளாஸ்டிக் மாசுபாட்டிற்கு எதிரான...

2024-03-27 10:17:41
news-image

SampathCards உடன் இணைந்து  0% வட்டி...

2024-03-20 02:18:01
news-image

பெண்களுக்கு அதிகாரமளித்தல், சமூகங்கள் மத்தியில் மாற்றத்தை...

2024-03-20 02:13:22
news-image

2023ம் ஆண்டின் நாலாம் காலாண்டில் குறிப்பிடத்தக்க...

2024-03-20 02:05:24
news-image

Francophonie 2024 – மார்க் அய்மன்...

2024-03-18 15:26:06
news-image

சியபத பினான்ஸ் பிஎல்சீ, பதுளை ஸ்ரீ...

2024-03-18 14:49:36
news-image

9 ஆவது வருடமாக கொழும்பு பங்குசந்தை...

2024-03-14 21:40:35
news-image

கொரியன் எயார்லைன்ஸுடன் கைகோர்க்கும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

2024-03-14 21:46:34
news-image

சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடிய மக்கள்...

2024-03-12 11:20:57