(எம்.எம்.மின்ஹாஜ்)

ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற குழு கூட்டம் திங்கட்கிழமை அலரிமாளிகையில் நடைபெறவுள்ளது.

இதன்போது பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை குறித்தும் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை குறித்தும்  ஆராயப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

மேலும் ஐக்கிய தேசியக் கட்சியின் மறுசீரமைப்பு குழுவின் அறிக்கையும் திங்கட்கிழமை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்கப்படவுள்ளது.

அத்துடன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாடுதிரும்பியவுடன் இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டாரவையும் சந்தித்து பேசவுள்ளார். 

இதன்படி பாராளுமன்ற குழு கூட்டத்தின் போது இவரை சந்திக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.