யாழ்ப்பாணம் நகர்ப்பகுதியில் இருந்து  ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம், கொட்டடி பகுதியில் இரும்பு கடை நடாத்தி வரும் ஆனைக்கோட்டையை சேர்ந்த  69 வயதான சிலுவைராஜா என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார்.

இவர் தனது கடைக்கு பின்புறம் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இது கொலையா அல்லது தற்கொலையா என்பது தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.