தாய்லாந்தில் உள்ள கிராமத்து மக்கள் பேய்க்கு பயந்து வினோதமான செயல்களில் ஈடுபட்டுள்ளனர். 

இந்த மாதத்தில் மட்டும் 5 இளைஞர்கள் மர்மமான முறையில் இறந்துள்ளனர். இவ்வாறு இறந்தவர்களின் ஆத்மா  ஏனைய ஆண்களின் உயிரை பறிக்கும் என்ற பயத்தில் அக்கிராம மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

அச்சத்தில் வீட்டில் உள்ள ஆண்கள் இரவு தூங்கும் போது பெண்களைப்போல் ஆடை  அணிந்து தூங்குகின்றனர். மேலும், வீட்டு வாசலில் இங்கு ஆண்கள் இல்லை என பலகை வைத்துள்ளனர். இதனை பார்த்து பேய் அவர்கள் வீட்டில் ஆண்கள் இல்லை நினைத்து திரும்பி சென்றுவிடும் என அவர்கள் தெரிவிக்கின்றனர்.

பேய்க்கு பயந்து ஆண்கள் இரவில் பெண்கள் போல் ஆடை அணிவது அனைவரிடமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.