நடிகை சன்னி லியோனை தொடர்ந்து உலகின் பிரபல ஆபாசப் பட நடிகை மியா கலீஃபா இனி ஆபாச வீடியோவில் நடிக்கப்போவதில்லை என்ற இந்த முடிவை கேட்ட அவரது ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளார்கள்.

ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் இருந்து கொலை மிரட்டல் வருகின்றமையால் மியா இனி ஆபாச வீடியோகளை வெளியிடப்போவதில்லை என்று முடிவெடுத்துள்ளார். 

இவர் தற்போது விளையாட்டு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

லெபனான் நாட்டில் பெய்ஷரூட் நகரத்தில் பிறந்த இவர் அமெரிக்காவில் புகழ்பெற்ற ஆபாசப் பட நடிகையாக விளங்கியவர் ஆவார்.

இவரது குடும்பம் 2000 ஆம் ஆண்டு அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்து சென்றுவிட்டனர். மியா கலீஃபா டெக்சாஸ் பல்கலைகழகத்தில் வரலாற்றுப் பிரிவில் இளங்கலைப் பட்டம் பெற்றவர். 18 வயது நிரம்பிய உடனேயே மியா கலீஃபா அமெரிக்கர் ஒருவரை கடந்த 2011 இல் திருமணம் செய்து கொண்டார்.

இவர் பிறப்பால் ஒரு முஸ்லிம் என்ற போதிலும், இவர் தன்னை ஒரு கிறிஸ்துவராக தான் காட்டிக்கொள்கிறார். இது சார்ந்தும் பல கான்ட்ரவர்ஸிகள் எழுந்தன. பார்ன் உலகில் நுழைந்த சிறிய காலத்திலேயே இவர் உலகின் நபர் 1 இடத்தை பிடித்துவிட்டார்.

மியா கலீஃபா, பள்ளி பயின்றுக் கொண்டிருக்கும் போது லாக்ரோஸி விளையாட்டில் சிறந்து விளங்கினார் என்றும் கூறப்படுகிறது.

மியா கலீஃபா ப்ளோரிடா, மியாமி பகுதியில் ஒரு பர்கர் கடையில் வேலை செய்துக் கொண்டிருந்தார். இங்கு வந்த ஒருவரின் தூண்டுதலின் பேரில் 2014 ஒக்டோபர் மாதம் மியா கலீஃபா பார்ன் துறையில் நுழைந்தார்.

இவர் இத்துறையில் நுழைந்ததில் இருந்து இவரது பெற்றோர் இவரிடம் பேசுவதில்லை.