தம்புள்ள ஊடகவியலாளர் காஞ்சனகுமார ஆரியதாசவின் கடமைக்கு இடையூறு செய்த புதைப்பொருள் ஆராய்ச்சி திணைக்களத்தினர், அவருக்கு எதிராக தம்புள்ள பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடும் செய்யப்பட்டுள்ளது. 

இம் முறைப்பாட்டிற்கு எதிராகவும், ஊடகவியலாளரை கைது செய்ய மேற்கொள்ள எடுக்கும் முயற்சியை கண்டித்தும், ஊவா மாகாண சபைக்கு முன்பாக, பதுளை ஊடகவியலாளர்கள் இன்று மேற்கொண்ட அமைதிப் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

பதுளை ஊடகவியலாளர்கள் கறுப்பு பட்டிகளை வாயில் கட்டியவாறும் இருப்பதையும், எதிர்ப்பு பதாதைகளை தாங்கியிருப்பதையும் படங்களில் காணலாம்.

பதுளை நிருபர்