அசர்பைஜானின் தலைநகரான பாகுவிலுள்ள போதைக்கு அடிமையானவர்கள் தங்கி இருந்து சிகிச்சைபெறும் புனர்வாழ்வு நிலையமொன்றில் ஏற்பட்ட தீயில் சிக்கி சுமார் முப்பதுக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், குறித்த போதை  புனர்வாழ்வு நிலையத்தில் ஏராளமானோர் தங்கி சிகிச்சைபெற்று வருகின்றனர். குறித்த  நிலையத்தில் இன்று அதிகாலை திடீரென தீ பரவியுள்ளது. 

இந்த தீ விபத்தில் அங்கு தங்கியிருந்து சிகிச்சை பெற்று வந்த 30 க்கும் மேற்பட்டோர் சிக்கி உடல் கருகி பரிதாபமாக பலியாகினர். 

மேலும், பலர் படுகாயம் அடைந்த நிலையில், அருகிலுள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நலையில், குறித்த பகுதிக்கு விரைந்த தீயணைப்பு படையினர், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டதுடன் மீட்புப் பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.