அமெ­ரிக்க கலி­போர்­னிய மாநி­லத்­தி­லுள்ள மொன்ட்­கி­ளயர் என்ற சிறிய நக­ரா­னது  பாத­சா­ரிகள்  வீதி­களை கடந்து செல்­கையில் கைய­டக்­கத்­தொ­லை­பே­சி­களைப் பயன்­ப­டுத்­து­வ­தற்கும் பாடல்­களைச் செவி­ம­டுப்­ப­தற்கும்  தடை விதித்­துள்­ளது.

இதன் பிர­காரம் வீதியைக் கடக்கும் போது  கைய­டக்­கத்­தொ­லை­பே­சியில் உரை­யாடிக் கொண்டோ அல்­லது   அதி­லுள்ள காட்­சி­களை அவ­தா­னித்துக் கொண்டோ பாடல்­களை செவி­ம­டுத்­துக்­கொண்டோ செல்லும் பாத­சா­ரிகள்  ஒவ்­வொ­ரு­வரும்  தலா  100  அமெ­ரிக்க  டொலர் பெறு­ம­தி­யான தண்­டப்­பண விதிப்பை எதிர்­கொள்ள நேரிடும். மேற்­படி குற்­றச்­செ­யலை திரும்ப   மேற்­கொள்ளும் பட்­சத்தில் 500  அமெ­ரிக்க டொலர் தண்டப் பணத்தை செலுத்த நேரிடும்  என்பது குறிப்பிடத்தக் கது.